செய்திகள்

இதழில் கதை எழுதும் நேரமிது... இயற்கையாக லிப் பாம் தயாரிக்கச் சில டிப்ஸ்கள்...

ஹரிணி

உதடுகளை இயற்கையாகப் பராமரிக்க எளிமையான குறிப்புகள்...

  1. 1 டீஸ்பூன் பழுப்புச் சர்க்கரை எடுத்துக் கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து உதடுகளில் தடவி 10 வினாடிகளுக்குத் தொடர்ந்து மசாஜ் செய்யவும். பின்னர் 5 வினாடிகளுக்கு அதை அப்படியே உலர விட்டு பின்னர் இதமான சூட்டிலிருக்கும் வெந்நீர் கொண்டு கழுவி மென்மையாகத் துடைக்கவும்.
  2. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் எடுத்துக் கொண்டு அதை உருக்கி நெய்யாக்கி அதனுடன் தோல் நீக்கப்பட்டு நைஸாக அரைத்தெடுக்கப்பட்ட பீட்ரூட் கலவையை 1 டீஸ்பூன் கலந்து இரண்டையும் நன்கு கலக்குமாறு ஸ்பூனால் கிளறிவிட்டு அதை ஒரு சிறூ பிளாஸ்டிக் கண்டெய்னரில் இட்டு ஃப்ரீஸரில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும். இப்போது வெண்ணெய், பீட்ரூட் கலவை உறைந்து மை போலிருக்கும். இந்தக் கலவையை நாம் ஃப்ரிஜ்ஜில் எடுத்து வைத்துக் கொண்டு அது தீரும் வரை பயன்படுத்தலாம். இந்தக் கலவையை தினமும் தூங்கச் செல்லும் முன் உதடுகளில் தடவிக் கொண்டு படுக்கச் செல்லலாம். தொடர்ந்து 1 மாதம் இப்படி செய்து வந்தால் வறண்ட உதடுகள் கூட அவற்றின் இயல்பான நிறத்தை திரும்பப் பெற முடியும். அது மட்டுமல்ல உதடுகளின் நிறத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

உதடுகளின் நிற மாற்றத்துக்கான காரணங்கள் என்ன?

  • புகைப்பழக்கம் மற்றும் தொடர்ச்சியான மதுப் பழக்கம்
  • தொடர்ந்து காஃபீ, டீ அருந்துவதாலும் உதடுகளின் நிறம் மங்கிக் கறுக்கும்.
  • இது தவிர வெயில் மற்றும் குளிர் காலங்களில் சீதோஷ்ண மாற்றத்தால் சருமம் வறண்டு போகும். மனித உடலில் உதடுப்பகுதி சருமம் தான் மிக மிக மெல்லியது எனவே உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாவதும் அதுவே தான். உதடுகளில் வெடிப்பு, உட்புற உதடுகளில் கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
  • இவற்றைத் தவிர்க்க காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும் செயற்கையான, வேதிப் பொருட்களின் கலப்பால் தயாரிக்கப்பட்டு லிப் பாம்கள் மற்றும் லிப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே இயற்கையான முறையில் நாமே சில எளிய அழகுக்குறிப்புகளை செயல்படுத்திப் பார்க்கலாம். அவற்றுள் இரண்டு தான் மேற்சொன்னவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT