செய்திகள்

நிறம் மங்கி கறுத்துப் போன வெள்ளிப் பாத்திரங்களைப் பளபளப்பாக்குவது எப்படி?

ராக்கி

அடைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்புடன் இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்குப் போட்டு அரைத்தால் அடை மிகவும் ருசியாக இருக்கும்.

கடலை எண்ணெய்யை நான்கு அல்லது ஐந்து சொட்டுவிட்டால் துவரம்பருப்பு சீக்கிரமே வெந்துவிடும்.

பீட்ரூட் சூப் செய்யும்போது தக்காளியையும் வேக வைத்து மிக்ஸியில் அரைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும்.

மோர்க் குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு மோர் மிளகாயை வறுத்துப் போட்டுவிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும்.

எலுமிச்சைத் தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும். 

உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் வெள்ளிப் பாத்திரங்களை துலக்கினால் பளபளவென்றிருக்கும். வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்களை‌ சபீனாவில் துல‌க்கு‌ம் போது ‌சி‌றிதளவு த‌யிர் அ‌ல்லது மோர் சே‌ர்‌த்து கழு‌வினா‌ல் பளிச்சிடும்

மோர் அதிகமாகப் புளித்துப் போய் விடாமல் இருக்க அதில் ஒரு காய்ந்த மிளகாயைப் போட்டு வைக்கவும்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 40 கிராம் நார்ச்சத்து தேவை. அதனால் தினம் 200 கிராம் கொண்டைக்கடலை சுண்டல், அல்லது 200 கிராம் கீரை அல்லது 200 கிராம் காய்கறி உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாகற்காயில் உள்ள இரண்டு வேதிப் பொருட்களுக்கு ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் குறைக்கும் குணமுண்டு. இன்சுலின் ஊசி மருத்திலுள்ள வேதிப் பொருட்கள் பாகற்காயில் உள்ளது.

மைதா மாவில் செய்யப்படும் பேக்கரி உணவு வகைகளில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் கணையத்தை பாதிக்கும். இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை சிறிது சிறிதாக அழித்து நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.

- எச். சீதாலட்சுமி, நெ.இராமன், சண்முக சுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT