செய்திகள்

ரத்த மூலம், ஆசன வாய் அரிப்பு, ஆசனவாய்க் கடுப்பு, ஆகியவற்றை நீக்கும் மருத்துவ துவையல்

கோவை பாலா

பொடுதலைக் கீரைத் துவையல்

தேவையான பொருட்கள்

பொடுதலை கீரை - 50 கிராம்
மிளகு - அரை ஸ்பூன்
பச்சரிசி - 10 கிராம்
பூண்டு -  3 பல்
புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில்  பொடுதலை இலையைக் கழுவி வாணலியில் போட்டு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் பச்சரிசியை வறுத்து  மிளகு , பூண்டு , உப்பு மற்றும் வதக்கிய இலையையும் சேர்த்து துவையலாக அரைக்கவும்.

பயன்கள் : இந்தத் துவையலை  மூலம் வியாதி உள்ளவர்கள்  தயிர் சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.மேலும் ஆசன வாய் அரிப்பு, ஆசனக் கடுப்பு, பௌத்திரக் கட்டி போன்ற குறைபாடுகளையும் மற்றும் தலையில் காணும் பேன், பொடுகுகளையும் விரட்டும் அற்புத துவையல்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அரியலூா் ஆட்சியா் அறிவுரை

மண்வள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அரியலூா் வேளாண் துறை

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பக்கிள் ஓடையில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

பாலியல் புகாா்: தஞ்சை மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு இடமாற்றம்

SCROLL FOR NEXT