செய்திகள்

கூடல் சங்கமேஸ்வரர் - ஐந்து உடல், ஒரு தலை சிற்பம்!

இந்த சிற்பத்தைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். மொத்தம் 5 உடல்கள் ஆனால் முகமோ ஒன்றே ஒன்று தான். சிலர் இதைப் பெண்ணின் முகம் என்கிறார்கள். ஆனால், பக்தர்களில் சிலர் இந்த சிற்பத்தில் இருப்பது கிருஷ்ணன்

RKV

இந்த சிற்பம் காணக்கிடைப்பது மகாராஷ்டிர மாநிலம், ஹட்டர்சங் எனும் குக்கிராமத்தில் இருக்கும் சங்கமேஸ்வரர் கற்கோயிலில். இந்த சிற்பத்தைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். மொத்தம் 5 உடல்கள் ஆனால் முகமோ ஒன்றே ஒன்று தான். சிலர் இதைப் பெண்ணின் முகம் என்கிறார்கள். ஆனால், பக்தர்களில் சிலர் இந்த சிற்பத்தில் இருப்பது கிருஷ்ணன் என்கிறார்கள். இந்த சிற்பம் அமைந்திருப்பது கோயில் கூரையில். ஆம், கூரையின் மீது புடைப்புச் சிற்பமாகத்தான் இது செதுக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால இந்தியாவின் சிற்பக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஐந்துடல் ஓர் முகச் சிற்பத்தை எந்தப் பக்கமிருந்து எப்படிப் பார்த்தாலும் அந்த ஓர் முகம் ஐந்து உடல்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்துவது தான் இதன் விசேஷமே!

பிஜப்பூர் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிரா- கர்நாடக எல்லையில் சோலாப்பூருக்கு 40 கி.மீ தெற்கே உள்ள ஹட்டர்சங் - குடால், இடைக்கால இந்திய கட்டிடக்கலைச் சிறப்புகளைத்  தேடுபவர்களுக்கு ஒரு புதையல் போன்றது. பீமா அனா சினா நதிகளால் இருபுறமும் சூழப்பட்டு தீபகற்ப நில வடிவத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. 17 ஆம் நூற்றாண்டு முதல் இந்த இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் உட்புறச் சிற்பங்கள் அத்தனையும் தொல்லியல் புதையல்கள் என்று தான் சொல்ல வேண்டும், அத்துணை அழகு. கோயில் உருவான காலம் 11 முதல் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். உருவாக்கியவர்கள் சாளுக்கிய மன்னர்கள். இதை ஹரிஹரேஸ்வரர் ஆலயம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT