செய்திகள்

கனவுகளை நனவாக்க குறுக்குவழிகள் எப்போதும் உதவாது: சச்சின் டெண்டுல்கர்

கார்த்திகா வாசுதேவன்

மும்பை, அக் .26 புகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வெற்றிக்கு குறுக்குவழிகள் எதுவும் உதவாது என்றும் ஒருவர் தனது கனவை அடைய வேண்டும் என்றால் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வெள்ளியன்று மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள பள்ளி மாணவர்களுடன் அவர் உரையாடியபோது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார், இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் டெண்டுல்கர், ஆரம்பகாலங்களில் முதன்முதலாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான சோதனை ஆட்டங்களில் பங்கேற்ற போது தேர்வுக்குழு தன்னை நிராகரித்த விஷயத்தையும் அவர் மாணவர்களுடனான சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். 

நான் ஒரு மாணவனாக இருந்தபோது, என் மனதில் பதிந்திருந்த ஒரே விஷயம் இந்தியாவுக்காக விளையாடுவதுதான். எனது பயணம் பதினொரு வயதில் தொடங்கியது, அப்போது இருந்த தேர்வாளர்கள் என்னிடம் இருந்த விளையாட்டுத் திறன் போதாது என்று கருதினர். எனவே கடினமாக உழைத்து நான் எனது திறனை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் என்னை வலுயுறுத்தினர். அந்தச் சமயத்தில் அவர்களது நிராகரிப்பும், வலியுறுத்தலும் எனக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஏனென்றால், நான் நன்றாக பேட் செய்தேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதனால் அவர்களது நிராகரிப்பு எனக்கு கடுமையான ஏமாற்றமளித்தது. அந்தப் போட்டியில் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால், அந்த ஏமாற்றத்திற்குப் பிறகு அடுத்து வந்த நாட்களில் எனது கவனம், அர்ப்பணிப்பு உணர்வு, கடினமாக உழைக்கும் திறன் மேலும் அதிகரித்திருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆம், எனது கனவை நான் எட்டிப் பிடிக்க வேண்டுமென்றால், என் கனவை நான் நனவாக உணர வேண்டுமென்றால் அதற்கு குறுக்கு வழிகள் எப்போதும் உதவாது என்பதை நான் உணர்ந்திருந்தேன். 

ஆம், அந்த முதல் கட்ட ஏமாற்றத்துக்குப் பிறகு தான் சச்சின் டெண்டுல்கள் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15,921 மற்றும் 18,426 ரன்களைக் குவித்தார். கிட்டத்தட்ட இரண்டரை தசாப்தங்களாக நீடித்தது அவருடைய நட்சத்திர கிரிக்கெட் வாழ்க்கை. இந்த வெற்றிகளுக்கெல்லாம் தான் மட்டுமே காரணம் இல்லை என்றும் இதில் தனது குடும்பம் மற்றும் குழந்தைப் பருவ கிரிக்கெட் பயிற்சியாளர் ராமகாந்த் ஆக்ரேக்கர் உள்ளிட்டோருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்றும் டெண்டுல்கர் பள்ளி மாணவர்களுடனான தனது உரையாடலின் போது பகிர்ந்து கொண்டார்.

டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முதலாக அவருக்கு ஒரு கிரிக்கெட் மட்டையை வாங்கிப் பரிசளித்தது யார் என்று தெரியுமா? அது புணேவில் வசிக்கும் அவரது அக்கா தான் என்ற உண்மையையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார் டெண்டுல்கர். இப்படி அம்மா, அப்பா, மூத்த சகோதரர்கள் அஜித், நிதின் எனது மனைவி அஞ்சலி, குழந்தைகள் அர்ஜூன், சாரா, எல்லோரையும் விட முக்கியமாக எனது குழந்தைப்பருவ பயிற்சியாளரான அக்ரேக்கர் ஐயா உட்பட அனைவருக்குமே தனது வெற்றிகளில் பங்கிருக்கிறது என்று அவர்களுக்குத் தனது நன்றிகளை உரித்தாக்கினார் சச்சின்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் சச்சின், வீரேந்தர் சேவாக், பிரையன் லாரா, பிரட் லீ, திலகரத்ன தில்ஷன் மற்றும் ஜாண்டி ரோட்ஸ் போன்ற ஆட்டக்காரர்களுடன் டெண்டுல்கர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதைக் காணலாம். இந்த சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் பங்கேற்கவிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT