செய்திகள்

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த இளைஞர்கள்

ஷக்திவேல்

பெருமைமிகு 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர்களான வைபவ் சேஷானந் (23) மற்றும் தீபன் குமார் (24) இடம் பிடித்துள்ளனர்.

வைபவ் மற்றும் தீபன் இருவரும் நண்பர்கள். இவர்கள் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக திரைப்படம் அல்லாத சுயாதீன இசைப் பிரிவில் ஒரே பாடலை பன்மொழிகளில் இசையமைத்து, எழுதி பாடியும் உள்ளனர்.

தீபன் குமார்

இந்த சுயாதீன ஆல்பத்தை ஜீ ம்யூசிக் நிறுவனம் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. தமிழில் வானவில் என்ற பெயரிலும், கன்னடத்தில் கண்மணி எனவும், ஹிந்தியில் குவாஸிஷ் என்ற தலைப்பில் பாடல்கள் வெளிவந்துள்ளன.

வைபவ் மற்றும் தீபனின் இந்த முயற்சியைப் பலரும் இணையத்தில் பாராட்டி வரும் நிலையில், இந்தச் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இந்தியன் புக் ஆஃப் ரெக்ட்டார்ஸில் இடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களின் இசைப் பயணம் தொடர வாழ்த்துகள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT