கோப்புப்படம் 
செய்திகள்

இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவும் ஆரஞ்சு

வைட்டமின் சி அதிகமுள்ள உணவுப்பொருள்களில் மிக முக்கியமானது ஆரஞ்சுப்பழம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் பித்த நீர் சுரப்பதைக் குறைக்கிறது. 

DIN

வைட்டமின் சி அதிகமுள்ள உணவுப்பொருள்களில் மிக முக்கியமானது ஆரஞ்சுப்பழம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் பித்த நீர் சுரப்பதைக் குறைக்கிறது. 

நாம் அதிகமாக இனிப்பு, கொழுப்பு உண்வுப் பொருள்கள் சாப்பிடும்போது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதுடன் பித்தநீர் சுரக்கிறது. இந்த பித்த நீர் ரத்தத்துடன் கலப்பதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆரஞ்சுக்கு உண்டு.  

தினமும் ஆரஞ்சுப்பழச் சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி அழகையும் கூட்டும். நாள் ஒன்றுக்கு இருமுறை கூட ஆரஞ்சு பழச்சாறை அருந்தலாம். 

இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்திகரிக்கப்படும். உடல் திசுக்கள் புத்துணர்வு பெறும். அதிக சக்தி கொண்டிருப்பதால் உடல் சோர்வு நீங்கும். இதனால் நோயாளிகளுக்கு ஆரஞ்சுப்பழச்சாறை தொடர்ந்து கொடுக்கலாம். 

மேலும் தாய்ப்பால் சுரப்பிற்கு கர்ப்பிணிகள், தாய்மார்கள் ஆரஞ்சு பழச்சாறை குடிக்க நல்ல பலன் கிடைக்கும். 

உடலில் உள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமின்றி குடல் புண், தொண்டைப்புண், சளி, ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகள் நீங்கும். உடலில் பித்த நீர்/ கெட்ட நீர் அதிகம் சுரப்பதால் இருதயக்கோளாறுகள் ஏற்ப்படுகின்றன. ஆரஞ்சு பழச்சாறு இதனைத் தடுக்கும் தன்மை கொண்டது. 

இறுதியாக என்றும் இளைமையுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தொடர்ந்து ஆரஞ்சு பழச்சாறை அருந்தி வர முகம் பொலிவு பெறும். சருமம் புத்துணர்ச்சி பெறுவதால் இளமையை தக்கவைத்துக்கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT