செய்திகள்

'பெண்களுக்கு இந்த நேரத்தில் சமைப்பதுதான் சவாலான விஷயம்'

DIN

இந்தியாவில் குறைந்தது 80% பெண்களுக்கு காலை உணவைத் தயாரிப்பது அவர்களுக்கு பிடிக்காத தருணம் என்று புதிய ஆய்வு மூலமாக தெரிய வந்துள்ளது. 

மின் சாதன தயாரிப்பு நிறுவனமான வி- கார்ட் மற்றும் ஆன்லைன் தளமான  Momspresso.com இணைந்து 500 இந்திய தாய்மார்களிடம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. அவர்களிடம் எந்த நேரத்திற்கு உணவு தயாரிப்பது சிரமமானது என கணக்கெடுக்கப்பட்டது. 

அதன்படி, காலை நேரங்களில் தான் உணவுத் தேவை அதிகமாக இருக்கிறது என்றும் 84% பேர் காலை நேர உணவுத் தயாரிப்பின்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். 

சமையலறையில் இந்திய பெண்கள் அனுபவிக்கும் மனநிலையைக் கண்டறிவதில் எங்களுக்கு இந்த ஆய்வு பெரிதும் உதவியது, குறிப்பாக அவரது காலை உணவு தயாரிப்பின்போது குடும்பத்தினரின் உதவியை எதிர்பார்க்கின்றனர் என்று வி-கார்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான வி.ராமச்சந்திரன் கூறினார்.

10 பெண்களில் 8 பேர் காலை உணவை சாப்பிடுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் இதன் மூலமாக தெரிய வந்துள்ளது. மேலும், குடும்பத்தினர் ஒரே மாதிரியான உணவுகளைச் சாப்பிடுவதால் உணவின் மீது சலிப்படைந்து அவர்கள் பலவகையான உணவுகளைத் தேடுகிறார்கள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று பெண்கள் பெரும்பாலும், அவர்கள் தயாரிக்கும் காலை உணவில் திருப்தி அடையவில்லை என்றும் அவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் காலை உணவைத் தயாரிப்பதை மிகப்பெரிய சவாலாக எண்ணுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 10ல் 7 பேர் தங்கள் கணவர் சமையல் வேலைக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 

மேலும், இந்த ஆய்வு திருமணமான பெண்களின் உண்மை நிலையை எடுத்துக் கூறுவதாக பெண்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT