செய்திகள்

ஜிம்முக்கு போக முடியலையா? - உடற்பயிற்சி நிபுணர்கள் கூறும் யோசனை இதோ!

IANS

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கரோனா வைரஸ் பரவலால் இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் பெரும்பாலான மாநிலங்களில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த வரிசையில் உடற்பயிற்சி கூடங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.

இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் என்ன செய்யலாம் என்பது குறித்து உடற்பயிற்சி வல்லுநர்கள் சில யோசனைகளைத் தருகிறார்கள். 

தற்போது மார்ச் 31ம் தேதி வரை உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் மிகவும் கடின பயிற்சி எடுத்து உடல் எடையை குறைக்க/ அதிகரிக்கச் செய்திருப்பர். இந்நிலையில், இந்த 2 வாரமும் உடற்பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் இதுவரை நீங்கள் எடுத்த முயற்சியின் பலன் குறைய நேரிடலாம். சில வாரங்களுக்கு பின்பு உடற்பயிற்சிகளை பின்பற்றுவது கடினமாகிவிடும். அதே நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நீங்கள் தொடர்ந்து சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். 

எனவே, வீட்டில் இருந்தோ அல்லது அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றோ உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறிது காலத்திற்கு வீட்டின் ஒரு அறையை அல்லது மொட்டை மாடியில் சிறிது இடத்தை ஒதுக்கி அன்றாட உடற்பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் இடம் காற்றோட்டமான சூழ்நிலையில் இருந்தால் சிறப்பு. 

அதே நேரத்தில் பூங்காவிற்குச் செல்லும்பட்சத்தில், கூட்டம் குறைவாக இருந்தால் மட்டுமே பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். 50க்கும் மேற்பட்ட நபர்கள் இல்லாத இடத்தை தேர்வு செய்யலாம். அவ்வாறு அருகில் பூங்கா, உடற்பயிற்சி செய்யும் இடம் எதுவும் இல்லாத பட்சத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யுங்கள். 

சாதாரணமாக நடைபயிற்சி என்பது நல்ல ஆரோக்கியத்தை பெற ஒரு எளிமையான உடற்பயிற்சி. அத்துடன் யோகாவையும் செய்யலாம். கடினமான உடற்பயிற்சியை செய்ய விரும்புபவர்கள் நண்பர்களுடன் இணைந்த வீட்டில் சில உடற்பயிற்சி உபகரணங்களை வாங்கி செய்யலாம். 

மேலும், தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய அதே நேரத்தில் கலோரி குறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதேபோன்று வீட்டில் சமைத்த உணவுகளையே உண்ணுங்கள். இந்த நேரத்தில் நன்கு வேகவைத்த உணவுகளை உண்ணுவது சிறந்தது. காலை, மாலை சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT