செய்திகள்

இயற்கை அழகுக்காக இன்ஸ்டாகிராமில் பிரச்சாரம் செய்யும் மாடல் அழகி!

DIN

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் மாடலான சாஷா பல்லாரி இன்ஸ்டாகிராமில் #filterdrop என்ற ஹேஷ்டேக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலமாக ஒரு எழுச்சியை காண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பில்டர் ஏதுமின்றி உண்மையான முகத்தை, உண்மையான சருமத்தை வெளிப்படுத்துவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம். இங்கிலாந்தின் 'கேர்ள் கைடிங்' என்ற மிகப்பெரிய தொண்டு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் தோற்றத்தை மாற்ற பில்டரை பயன்படுத்துகின்றனர். பில்டரை பயன்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் அவர்கள் செல்ஃபி புகைப்படங்களை பதிவிடுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. 

அவ்வாறு பில்டர் செய்யாத புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட நேரிட்டால், அது எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறது என நண்பர்களிடம் கருத்துகேட்டுவிட்டு பதிவிடுகிறார்கள் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்தே பல்லாரி இன்ஸ்டாகிராமில் #filterdrop பிரச்சாரத்தைப் பற்றிய விடியோவை வெளியிட்டார். இதுவரை இந்த விடியோவை கிட்டத்தட்ட 50,000 பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்த பில்டர்கள் ஆபத்தானவை என்றும் இதன்மூலமாக புகைப்படங்களை மற்ற நபர்கள் ஹேக் செய்து எடுக்க முடியும் என்று கூறுகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT