செய்திகள்

முகப்பருக்கள் நீங்கி சருமம் பொலிவு பெற...

DIN

முகத்தின் அழகைக் கெடுக்கும் பருக்கள் இளம்பெண்களுக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பருவநிலை மாற்றம், உடலியல் செயல்பாடுகளில் மாற்றம், உணவுப்பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது. முகப்பருக்கள் வந்துவிட்டால் தொடர்ந்து சருமத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடும். அது எளிதாக பரவும் வகையில் முகப்பருக்களின் மீது கை வைக்கக் கூடாது. 

முகப்பருக்களை விரட்ட கிருமிநாசினிகள் பல இருப்பினும் சில எளிய குறிப்புகள் இதோ..

முகப்பருக்களை விரட்ட மஞ்சள் மிகச்சிறந்த பொருள். தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் முகத்தில் மஞ்சள் தடவிவிட்டு குறிப்பாக பருக்கள் இருக்கும் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். 

அதேபோன்று ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரை தடவி வர பருக்கள் இன்றி முகம் பொலிவுடன் இருக்கும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். 

மூன்றாவதாக சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. எனவே, முகத்தில் சந்தனத்தை அப்ளை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து உணர்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பருக்களின் மீது சந்தனம் தடவி வர பருக்கள் மறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT