செய்திகள்

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

DIN

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாகவே உள்ளது. மாவுச்சத்து மிக்க உணவுப் பொருள் என்பதால் கார்போஹைட்ரேட் உடலில் அதிகம் சேர்வதால் உடல் எடையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 

உண்மையில் உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கிறதா? என்றால் இல்லை. 

ஓர் உணவுப் பொருளில் எண்ணற்ற சத்துகள் இருக்கும். அதில் உள்ள ஒரே ஒரு மூலக்கூறுக்காக அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லதல்ல. எந்த ஒரு உணவையும் அளவாக சாப்பிட்டாலே பலன் அதிகமாக இருக்கும். மேலும் அதை எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது. 

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி, புரதம், நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஸ்டார்ச், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் உடல் எடையை நிர்வகிக்க உதவுவதுடன் உடலுக்கு நீரேற்றத்தையும் அளிக்கிறது. 

எனவே, தினமும் ஒரு உருளைக்கிழங்கு சாப்பிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். மேலும் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து சாப்பிட வேண்டும். முடிந்தவரை எண்ணெய் சேர்க்காத வகையில் சாப்பிட்டால் உருளைக்கிழங்கால் உடல் எடை அதிகரிக்காது. மேலும் பசியை அடக்கும் ஓர் உணவுப்பொருள் இது என்பதால் உட்கொள்ளும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தும். 

கிலோ கணக்கில் உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரென்ச் பிரைஸ், ஆலு டிக்கி உருளைக்கிழங்கை நன்றாக எண்ணெய்யில் வறுத்து சாப்பிடுபவர்களுக்கு இது பொருந்தாது.

உருளைக்கிழங்கை சரியான அளவில் வேகவைத்து சாப்பிட்டால் உடலுக்கு சக்தி தருவதுடன் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

ஆனால், நீரிழிவு நோயாளிகள் மட்டும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுமெனில் மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT