செய்திகள்

ஒரு லிப்ஸ்டிக்...5 வழிகளில் பயன்படுத்தலாம்! எப்படி?

லிப்ஸ்டிக் பெரும்பாலான பெண்களின் விருப்பமான ஒரு பொருள். முகத்தின் மற்ற மேக் அப்களைக் காட்டிலும் லிப்ஸ்டிக்கிற்கு முதலிடம்தான். 

DIN

லிப்ஸ்டிக் பெரும்பாலான பெண்களின் விருப்பமான ஒரு பொருள். முகத்தின் மற்ற மேக் அப்களைக் காட்டிலும் லிப்ஸ்டிக்கிற்கு முதலிடம்தான். 

லிப்ஸ்டிக் போடுவது அழகுக்காக மட்டுமல்ல, எதோ ஒரு நம்பிக்கையையும் முகத் தோற்றம் குறித்த திருப்தியையும் தருவதாகக் கூறுகின்றனர் இக்காலப் பெண்கள். லிப்ஸ்டிக் போட்டால்தான் மேக்- அப்பே நிறைவு பெறுவதாக ஒரு நம்பிக்கை. 

இந்த லிப்ஸ்டிக்கை உதடுகளுக்கு மட்டுமின்றி பல வழிகளில் பயன்படுத்தலாம். 

ஐ ஷேடோ 

கண்களுக்கும் புருவங்களுக்கும் இடையே போடப்படும் ஐ- ஷேடோ பொதுவாக மேக்-அப்க்கு ஏற்றவாறே அல்லது உடைகளின் வண்ணங்களுக்கு ஏற்றவாறே இருப்பது நன்றாக இருக்கும். 

இந்நிலையில் ஐ ஷேடோவுக்கு லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக் கொண்டு லேசாக வைத்து பின்னர் பிரஷ் கொண்டு கண்களின் மேல்பகுதியில் தடவி விடலாம். 

கன்னம் 

மணப்பெண்களுக்கு மேக்-அப் செய்யும்போது சிரிக்கும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் கன்னம் ஜொலிக்க வேண்டும் என்பதற்காகவும் கன்னத்தின் விளிம்புகளில் மேக்-அப் செய்வதுண்டு. இதற்கும் நீங்கள் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். 

தாடையின் விளிம்பு

முகத்தின் தாடை விளிம்புகளும் கூர்மையாக அழகாக இருக்கும்பொருட்டு ஒரு லைனர் மேக் அப் போடப்படுவது வழக்கம். அந்தவகையில் தாடையின் விளிம்புகளில் லிப்ஸ்டிக்கையும் பயன்படுத்தலாம்.  

மூக்கு விளிம்பு

கன்னத்தின் விளிம்புகள், தாடை விளிம்புகள் போல மூக்கின் நுனியும் முக்கியமான பகுதி. இங்கும் நீங்கள் லிப்ஸ்டிக்கை லேசாக பயன்படுத்தலாம். 

கலர் கரெக்டர் 

சிலருக்கு கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் அல்லது முகத்தில் கருமையான பகுதிகளில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். உங்கள் மேக்-அப்பிற்கு ஏற்றவாறு சரியில்லாத இடங்களை சரி செய்ய லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT