செய்திகள்

குழந்தைகளிடம் அதிகரிக்கும் செல்போன் பயன்பாடு: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

DIN

கரோனா தொற்றுநோய் காலத்தில் குழந்தைகள் மொபைல்போனை பயன்படுத்தும் நேரம் கணிசமாக அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

கரோனா காலத்தில் தகவல் தொடர்புக்கு மின்னணு சாதனங்களே பெரிதும் பயன்பட்டன. பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை, குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி என்று அனைத்துமே டிஜிட்டல் சார்ந்து இருந்தன. 

சில நிமிடங்கள் கிடைத்தாலே மொபைல் போன், ஆன்லைன் விளையாட்டு என்றிருக்கும் குழந்தைகளுக்கு கரோனா காலம் போதாத காலம்தான். 

டிவி, மொபைல்போனில் தான் பெரும்பாலான நேரத்தைக் கழித்துள்ளனர். பள்ளி செல்லாததால் குழந்தைகளுக்கும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டின.

இந்நிலையில், ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழக(ARU) ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கரோனா காலத்தில் குழந்தைகள் அதிகம் டிவி, மொபைல் போன் உள்ளிட்டவை பயன்படுத்தியது உடல்நலத்தில் தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளனர். 

'ஸ்கூல் ஹெல்த்' என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதிக மொபைல் போன் பயன்பாடு, குறிப்பாக குழந்தைகளின் கண்பார்வையை பாதிக்கும் என்றும் அவர்களின் உடல்நலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். 

 ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் கணினி, லேப்டாப், மொபைல்போன் பயன்பாடுமே ஆபத்துதான் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஜெர்மனி, கனடா, சிலி உள்ளிட்ட நாடுகளில் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே உலகம் முழுவதுமுள்ள மாணவர்களின் கண்பார்வை, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஒரேநேரத்தில் பல மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்து என்றும் எச்சரிக்கின்றனர். உதாரணமாக லேப்டாப் பார்க்கும்போதும் மொபைல்போனையும் பயன்படுத்துவது கண்ணில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி விரைவில் பார்வை குறைபாடு வரக் காரணமாகிறது. கழுத்து, தோள்ப்பட்டை வலி, முதுகு வலி, உடலியக்கம் இல்லாததால் உடல் பருமன், அதனால் நீரிழிவு என பாதிப்புகள் தொடர்கின்றன. 

ஆய்வாளர் ஷாஹினா பர்தான் இதுகுறித்து, 'குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. ஆனால, அதே நேரத்தில் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம். 

சரியான முறையில் மற்றும் டிஜிட்டல் சாதனங்களிலிருந்து விலகி வெளியில் விளையாடுவது போன்ற உடல் இயக்க நடவடிக்கைகள் குழந்தைகளை ஈடுபட வைக்க வேண்டும். 

கற்றலுக்காக அவற்றை பயன்படுத்துவது அவசியம். ஆனால், சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT