செய்திகள்

ஆளி விதைகள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

DIN

ஆளி விதை பல்வேறு உணவு கட்டுப்பாடு திட்டங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் இது ஒருவரது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆளி விதையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்காமல் தடுக்கும்.

1. ஆளி விதைகள் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

ஆளி விதைகளில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

2. இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது

ஆளி விதைகளில் புரதம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்திருப்பதாலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பாலூட்டி சுரப்பிகளில் இருந்து தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டவும், பராமரிக்கவும் மற்றும் அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும் உணவுகள் கேலக்டோகோக்ஸ் ஆகும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக தங்கள் உணவில் ஆளி  விதைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3. மாதவிடாயை சீராக்க உதவுகின்றன

ஆளி விதைகள் ஒழுங்கற்ற மாதவிடாய்களை சீராக்க உதவுகிறது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதற்கும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்குவதற்கும் ஒரு இயற்கையான வழியாகும்.

4. உடல் எடையை குறைக்க உதவுகிறது

ஆளி விதைகள், நார்ச்சத்து மற்றும் புரதத்தின் வளமான ஆதாரங்களாக இருப்பதால்,  உடலின் தசைகளை பராமரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
ஹலீம் விதைகள்

5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஆளி விதைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஒரு சிறந்த உணவாகும். மேலும் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பல்வேறு தொற்றுகளை தடுக்க உதவுகிறது.

6. மலச்சிக்கலைப் போக்கும்

ஆளி விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் வாயு மற்றும் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளை போக்க உதவுகின்றன.

இந்த சிறிய விதைகள் வழங்க இன்னும் பல நன்மைகள் உள்ளன. எனவே இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது  உடலின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும். ஆனால்  ஆளி விதைகளை அளவாக  உட்கொள்ள வேண்டும்.

ஆளி விதைகள் எடுத்து கொண்டால் நிச்சயம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT