முகப்பு
செய்திகள்

ஐபோன் வாங்கத் திட்டமிடுகிறீர்களா.. ஆன்லைன் தள்ளுபடி!

ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் மாடல்களுக்குத் தள்ளுபடி விற்பனை ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

Updated On : 28 டிசம்பர், 2023 at 12:50 PM
ஐபோன் | Pexels
பகிர்:

ஆண்ட்ராய்டு அலைபேசிகள் விதவிதமான மாடல்களில், விலைகளில், வசதிகளில் சந்தையில் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு இருக்கும் மவுசு குறையாதது. ஐபோன் வாங்கத் திட்டமிடுவது பல மாதங்களுக்குச் சம்பளத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவதற்குச் சமமானது.

இந்த நிலையில், ஆன்லைன் விற்பனை தளங்கள் அறிவிக்கும் தள்ளுபடியைப் பயன்படுத்தி வாங்கும்போது பட்ஜெட்டில் கணிசமாக மிச்சமாகும்.

ஃபிளிப்கார்டு விற்பனை இணையதளம், ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் மாடல்களுக்கு ஆப்பிள் அதிகாரபூர்வ இணையதள விலையை விட ரூ.15,000 வரை குறைவாக நிர்ணயித்து தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது.

Advertisement

ஐபோன் 14 மாடலின் விலை ரூ.69.900/ பிளிப்கார்டில் ரூ.57,999/ முதல் இது விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஐபோன் 14 பிளஸ் ஷோ-ரூம் விலை ரூ.79,900/ ஃபிளிப்கார்டில் ரூ.64,999/- ஆக குறைந்துள்ளது.

மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கி கடன் அட்டை இஎம்ஐ மூலம் வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.750 வரை தள்ளுபடி பெற முடியும்.

ஐபோன் 13 வாங்க விரும்புபவர்கள், அமேசான் தளத்தைப் பார்வையிடலாம். ரூ.53,499 விலைக்குக் கிடைக்கும் இந்த அலைபேசியை வாங்கும்போது அமேசான் ஐசிஐசிஐ கடன் அட்டையை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.2,409 வரை தள்ளுபடி பெற முடியும்.

ஐபோன் 15 மாடல், ஃபிளிப்கார்டில் மிகக் குறைந்த விலையாக ரூ.72,900-க்கும் அமேசானில் ரூ.71,155-க்கும் குறிப்பிட்ட கடன் அட்டைகள் பயன்படுத்தி வாங்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.