செய்திகள்

தலைமுடி அதிகம் உதிர்கிறதா? என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

DIN

தலைமுடி உதிர்வு இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை. ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக தலைமுடி உதிர்வை சரிசெய்ய அழகு நிலையங்களில் மசாஜ் அல்லது மருத்துவ சிகிச்சை முறைகளைக் கூட எடுத்துக்கொள்கின்றனர். 

சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், தலைமுடி பராமரிப்பின்மை என ஒவ்வொருவரைப் பொருத்தும் தலைமுடி பிரச்னைக்கான காரணங்கள் மாறுபடும்.

அன்றாட வாழ்க்கையில் தலைமுடி பராமரிப்பு என்பது மிகவும் அவசியமானது.  இதற்கு ஆரோக்கியமான உணவுகளும் அவசியம். 

தலைமுடி பராமரிப்பிற்கு என்னென்ன உணவுகள் உதவும்? 

நட்ஸ்: துத்தநாகம், வைட்டமின் பி, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்த நட்ஸ் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு வலுவூட்டுகிறது. 

புரோட்டீன்: சிக்கன், மீன், முட்டை, பருப்பு வகைகள், கீரைகள் உள்ளிட்ட புரோட்டீன் நிறைந்த உணவுகள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. 

வால்நட், கடுகு விதைகள், சியா விதைகள், சோயாபீன்ஸ் உள்ளிட்டவை தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும். 

கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் சாறாகவோ அல்லது ஏதோ ஒரு வடிவிலோ சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அவோகேடா, பெர்ரி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களும் கேரட், புரோக்கோலி, கீரைகள் உள்ளிட்ட வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

பொதுவானவை:

இதுதவிர தலைமுடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், சீப்புகளை அவ்வப்போது கழுவி பயன்படுத்த வேண்டும். 

அதிக ரசாயனம் நிறைந்த ஷாம்பூ, கண்டிஷனர்களைப் பயன்படுத்தக் கூடாது. 

தலையை ஈரத்துடன் சீப்பு கொண்டு சீவுவது, இறுக்கக் கட்டுவது உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். 

தலைக்கு குளிப்பதற்கு முன்னதாகவோ அல்லது முந்தைய நாள் இரவோ, எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் கற்றாழை, முட்டை, மருதாணி போன்ற இயற்கை மாஸ்குகளை முயற்சி செய்து பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT