செய்திகள்

செல்போனுக்கு அடியில் பணத்தை வைப்பவரா நீங்கள்...? எச்சரிக்கை!

DIN

செல்போனுக்கு அடியில் பணத்தை வைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை செய்தி.

நாம் வெளியே செல்லும்போது குறைவான பொருள்களை எடுத்துச் செல்வதையே விரும்புகிறோம். அந்த வகையில், ரூபாய் நோட்டுகளை தனி பணப்பையில் எடுத்துச் செல்லாமல், செல்போன் கவருக்கு பின்னால் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பரிவர்த்தன அட்டைகளையும் வைக்கிறோம். இதனால் ஏற்படும் ஆபத்தை உணராமல் இதைத் செய்கிறோம்.

செல்போன்கள் தீப்பிடிப்பது அல்லது வெடிப்பது என்பது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது, ஆனால் அதற்குக் காரணம் நம்முடைய கவனக்குறைவு அதற்கு காரணமாக இருக்கலாம். 

செல்போன் அதிக வெப்பமடையும் போது பெரும்பாலும் இதுபோன்ற பிரச்சனை ஏற்படலாம், ஆனால் இதற்குப் பின்னால் உள்ள காரணம் செல்போனை அதிகமாகப் பயன்படுத்துவதோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதோ காரணமாக இருக்கலாம். 

வழக்கமாக, செல்போனின் செயலி (processor) அல்லது பேட்டரியில் அதிக அழுத்தத்தை கொடுக்கும் போது தீப்பிடிக்கிறது. இது தவிர தவறான வகை செல்போன் கவரால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், ரூபாய் நோட்டுக்கள் ஆனது ரசாயணங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் செல்போனில் இருந்து வெப்பம் வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டு வெடிக்கும் ஆபத்து உள்ளது. இதேநிலைதான் தவறான வகை செல்போன் கவர்களாலும் நடக்கிறது.

எனவ, செல்போன் கவருக்கு அடியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருளை வைக்கக் கூடாது. பொதுவாக எந்தவொரு பொருளையும் வைக்காமல் இருப்பது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு பணிக்கு செல்வோருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பருத்தி, எள் சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை

குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT