செய்திகள்

நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு இந்த பிரச்னை அதிகமாக இருக்குமாம்!

கிராமப்புறங்களைவிட நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னைகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

DIN

கிராமப்புறங்களைவிட நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னைகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

நகர்ப்புறங்களில் வசிக்கும் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சராசரியாக 17 சுவாச நோய்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆரோக்கியமான இளம் வயதினர்கூட இன்று பல்வேறு உடல் பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

கர்ப்ப காலம் முதல் மூன்று வயது வரையுள்ள 663 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

மூன்று வயதிற்கு முன்னதாகவே, நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு இருமல், சளி என சராசரியாக 17 சுவாச நோய்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவே கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு சராசரியாக 15 சுவாசத் தொற்றுகள் இருந்துள்ளன.

இதில் கிராம, நகரங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைச் சூழல் பொறுத்து குழந்தைகளின் உடல்நிலையில் பெருமளவில் மாற்றம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

பீடியாட்ரிக் பல்மனாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஆய்வில், 3 வயதுக்குள்ளாகவே குழந்தை பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் குழந்தைகள், ஈரப்பதமுள்ள வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு மார்பில் பிரச்னைகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலியின் மிலனில் உள்ள ஐரோப்பிய சுவாச அமைப்பில்(European Respiratory Society) இந்த ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதெல்லாம் சின்ன விஷயங்கள்... திவ்யா உர்துகா!

பூமியில் நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மேகம், மலை, நீர், நிலம்... ஷாமா சிக்கந்தர்!

மக்களுக்குப் பிடித்த சின்ன திரை நடிகை! விருது வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி!

அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT