செய்திகள்

கவனம்! புற்றுநோயை ஏற்படுத்தும் சமையலறைப் பொருள்கள்!

DIN

மாறிவரும் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிகை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களும் அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில் வீட்டில் சமையலறையில் பயன்படுத்தப்படும் சில பொருள்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். 

என்னென்ன பொருள்கள்?

பிளாஸ்டிக் பாட்டில்

பிளாஸ்டிக் பாட்டில்களில் பிஸ்பெனால் ஏ என்ற நச்சுப்பொருள் உள்ளது. இது ஹார்மோன்களின் சமநிலைத் தன்மையை குலைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படலாம். 

நான்-ஸ்டிக் 

நான்-ஸ்டிக் பாத்திரங்களை சூடேற்றும்போது அது சூடாகியதும் பிஎப்ஓஏ (பெர்ப்ளூரோஆக்டனிக் அமிலம்) என்றொரு அமிலத்தை வெளிப்படுத்துகிறது. இது சிறுநீரகம், விதைப்பை, கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும். 

கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள் 

கேன்களில் உள்ள பிஸ்பெனால் ஏ(BPA) அதில் அடைக்கப்படும் உணவுகளிலும்  சேர்கிறது. இதனால் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. 

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் அதிகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கின்றன. இது மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் தோன்றக் காரணமாகிறது. 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி குறிப்பாக ஆண்களிடையே பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும். 

பொதுவாகவே சமையலறையில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. 

குறிப்பாக காய்கறிகளை நறுக்குவதற்கு பிளாஸ்டிக் பலகைகளை பயன்படுத்தாமல் மரத்தாலான பலகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பிளாஸ்டிக் பலகைகளை பயன்படுத்தும் அதில் உள்ள சிறு பிளாஸ்டிக் துகள்கள் உணவில் சேரும். அதுபோல சூடான பொருள்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கக் கூடாது. 

சோப்பு மற்றும் பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பில் ப்தாலேட், பராபென்ஸ், சல்பேட்ஸ் ஆகியவை புற்றுநோயை ஏற்படுத்தும். 

அடுத்து, தினமும் பால் பொருள்களை உணவில் சேர்க்கும்போது கல்லீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வுகளை தெரிவிக்கின்றன. 

அதுபோல டயட் சோடா அதிகம் குடித்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 13% அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரைக்கதிர்

ஸ்பைசி சப்பாத்தி

வரகு வடை

சோயா ஃபிரைட் ரைஸ்

ஓட்ஸ் பாயசம்

SCROLL FOR NEXT