செய்திகள்

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு..?

கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், போதிய ரத்தமின்றி இருக்கும் கர்ப்பிணிப் பெண்களும் எடுத்துக்கொள்ள வேண்டிய பழம்.

DIN

கடவுள் நமக்களித்த இயற்கை வரப்பிரசாதங்களில் ஒன்று தான் அத்திப்பழம். உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அத்தி மரத்தின் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை என அனைத்து பாகங்களும் ஆரோக்கிய பலன்களை அள்ளி வழங்கும் தன்மை கொண்டது. எண்ணிலடங்கா மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.

அத்தியில் உள்ள மருத்துவக் குணங்கள்...

* மற்ற பழங்களை விட அத்திப் பழத்தில் நான்கு மடங்கு சத்துக்கள் உள்ளன. புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து அதிகளவில் இருப்பதாகவும், இதைத் தவிர வைட்டமின் ஏ, சி அதிகளவில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

* உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.

* மாதவிடாய் நின்ற பிறகும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதன் காய்களிலிருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.

* மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தியாகும். பித்தம் தணியும், வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும்.

* சிறுநீரகத்தில் கல்லடைப்பை தடுத்து சிறுநீரை சீறாக்குகிறது. சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தைக் குணமாக்குகிறது.

* நானொன்றுக்கு அதிகமாக அல்ல 2 பழங்கள் போதுமானது. உடலில் இருப்பு சத்து உண்டாகும். ரத்த உற்பத்தி பெருகும். ஒரே மாதத்தில் ஒரு கிராம் வரை ஹீமோகுளோபின் உயரும்.

* கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், போதிய ரத்தமின்றி இருக்கும் கர்ப்பிணிப் பெண்களும் உலர் அத்திப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

* உடலில் செரிமானத்தைத் தூண்டும் சக்தி அத்திப் பழத்துக்கு உண்டும். மலச்சிக்கலால் அவதிப்படுவோர் உணவிற்குப் பிறகு அத்தி விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.

* உடல் எடையைக் குறைக்க கடும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றும்போது சத்துக்கள் இழப்பு ஏற்படலாம். அவர்கள் ஒன்று, இரண்டு அத்திப்பழத்தை எடுத்துக்கொள்ள உடல் பலவீனமாகாமல் தடுக்கும்.

அனுதினமும் அத்திப்பழத்தை எடுத்துக்கொள்வோம்..நோயற்ற வாழ்வை பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT