வைட்டமின் டி (கோப்புப்படம்) 
செய்திகள்

வைட்டமின் டி மாத்திரைகளை எப்படி உட்கொள்ளலாம்?

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் அதற்கான மாத்திரைகளை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்த பார்வை.

இணையதளச் செய்திப் பிரிவு

உலகம் முழுவதும் ஏராளமான மக்களுக்கு இருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் மிக முக்கியமானதாக விளங்குவது வைட்டமின் டி பற்றாக்குறை.

ஒருவருக்கு இயற்கையான முறையில் வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. உடலில் வைட்டமின் டி குறைவதால், தலைச்சுற்றல், அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுதல், மயக்கம், எலும்புகளில் வலி, காயங்கள் ஆறுவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் நேரிடுகின்றன.

ரத்தத்தில் வைட்டமின் டி என்பது பொதுவாக 21-29 என்ஜி/எம்எல் இருக்க வேண்டும். மாறாக, 20 என்ஜி/எம்எல் இருந்தால், வைட்டமின் டி குறைபாடு என்று அர்த்தமாகும்.

வைட்டமின் டி குறைவாக இருந்தால், அதற்கு மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஒருவர் வழக்கமாக எவ்வளவு வைட்டமின் டி மாத்திரைகள் சாப்பிடலாம், தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாமா என்பதில் சில சந்தேகங்கள் நிலவுகின்றன.

அதாவது, மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், பெயரிவர் ஒருவர் (19 - 70 வயது) நாள்தோறும் 15 எம்சிஜி அல்லது 600 ஐயு அளவுக்கு வைட்டமின் டி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள், குறைவான அளவிலேயே வைட்டமின் டி மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். அதாவது வைட்டமின் டி2 அல்லது டி3 மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். சில மருத்துவ நிபுணர்கள் வாரத்துக்கு ஒரு முறை சற்று அதிக அளவுள்ள வைட்டமின் டி மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள்.

கடந்த 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளில், கரோனா தொற்றின்போது, வாரத்துக்கு அதிகப்படியான (21,000 ஐயு) வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மரணங்கள் தவிர்க்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்விலும், கர்ப்பிணிகளில், தினந்தோறும் 1,000 ஐயு கொண்ட மாத்திரைகளை எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் வாரத்துக்கு 50,000 ஐயு மாத்திரைகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாமல், ரத்த அளவு அதிகரித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலானவர்களுக்கு வாரத்தில் ஒரு முறை அதிக அளவுள்ள வைட்டமின் டி மாத்திரைகள் சரியாக இருப்பதாகவும், ஆனால் சிலருக்கு நாள்தோறும் எடுத்துக்கொள்வதே சரியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எதுவாக இருந்தாலும், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT