உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், உடல் பருமனாக இருப்பவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது என்று பொதுவான கருத்து நிலவுகிறது. இது உண்மையா?
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. இதனால் உடல் எடை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி, புரதம், நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் ஸ்டார்ச், பொட்டாசியம் சத்துகள் உள்ளன. ஆன்டி- ஆக்சிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.
உண்மையில் இதில் உள்ள பொட்டாசியம் உடல் எடையை நிர்வகிக்க உதவுவதுடன் உடலுக்கு நீரேற்றத்தையும் அளிக்கிறது.
ஓர் உணவுப் பொருளில் எண்ணற்ற சத்துகள் இருக்கும். அதில் உள்ள ஒரு பொருளை மட்டும் வைத்து உணவில் அதனை தவிர்த்து விடக்கூடாது.
எந்த ஒரு உணவையும் அளவாக சாப்பிட்டாலே உடலுக்கு எந்த பிரச்னையும் வராது. மேலும் உடலுக்கும் அனைத்துவிதமான சத்துகளும் தேவை. அதனால் அனைத்து உணவுப் பொருள்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதனால் உருளைக்கிழங்கையும் அளவோடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே, அனைத்து வயதினரும் தினமும் ஒரு உருளைக்கிழங்கு சாப்பிடலாம். எண்ணெயில் எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்து சாப்பிட்டால் நல்லது என்று பரிந்துரைக்கின்றனர்.
மேலும் பசியை அடக்கும் ஓர் உணவுப்பொருள் இது என்பதால் உட்கொள்ளும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது என்று கூறுவதும் தவறு. மருத்துவர்களின் பரிந்துரைப்படி அளவுடன் எடுத்துக்கொள்ளலாம்.
உருளைக்கிழங்கை சரியான அளவில் வேகவைத்து சாப்பிட்டால் உடலுக்கு சக்தி தருவதுடன் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
நடுத்தர அளவு உருளைக்கிழங்கில் 110 கலோரி உள்ளது. இது குறைந்த கலோரி உணவுதான். உடல் எடையைக் குறைக்கும் உணவுகளில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.