வளாக நேர்காணல்களில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு பதிலளிப்பது பற்றி மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அளித்த பதில்கள்.
ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்வது என்பது, அங்கு நடத்தப்படும் நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கும் பதிலின் மூலமாகவே உறுதி செய்யப்படுகிறது.
அந்த வகையில்தான, பல திறமையான இளைஞர்கள், பதற்றத்தின் காரணமாக வேலைக்கான நேர்காணலில் கேட்கப்படும் மிகப்பொதுவான, சாதாரண கேள்விகளுக்குக் கூட, மோசமான பதில்களை அளித்து வெளியேற்றப்படுவார்கள்.
நேர்காணலில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கேட்கும் சில அடிப்படையான கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது பற்றி மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அளித்திருக்கும் விளக்கம் தற்போது வெளியாகி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு அவர் அளித்த நேர்காணலில் அவர் சொன்ன பதில்கள், தற்போது இளைஞர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதால், அது வைரலாகி வருகிறது.
பொதுவாக நேர்காணலின் இறுதியில், என்ன ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்? என்பது நிச்சயம் எழுப்பப்படும் கேள்வி.
இதற்கு பில்கேட்ஸ் கொடுத்திருக்கும் அட்டகாசமான பதிலைப் பாருங்கள். "நிச்சயமாக உங்கள் நிறுவனம் கொடுக்கும் ஊதியம் மிகச் சிறப்பாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அதனை ஏற்க தயாராகவே இருக்கிறேன். இந்த நிறுவனத்துக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று நம்புகிறேன். எனவே, எதிர்காலத்தைதான் நான் கருத்தில் கொள்கிறேன். இப்போது உடனடியாகக் கிடைக்கும் ஊதியத்தை மட்டும் பொருள்படுத்த முடியாது. இந்த வேலைக்கு வெளியே நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, நியாயமான ஊதியத்தை எதிர்பார்க்கிறேன்" என்று சொல்லலாம் என்கிறார்.
பில் கேட்ஸ் கொடுத்திருக்கும் பதில் மிக எளிதாக இருந்தாலும், எதிர்கால நம்பிக்கை மற்றும் இளைஞர்களின் இலட்சியத்தையும் தெளிவுபடுத்தும் வகையில் உள்ளது.
இதையும் படிக்க... இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.