உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சித்து வருகிறார்கள்.
போதிய உடற்பயிற்சியுடன் முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது நிபுணர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க வீட்டில் உள்ள சில சமையல் பொருள்களைப் பயன்படுத்தலாம்.
உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, நீண்ட ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, மோசமான உணவுப் பழக்கவழக்கம், ஹோட்டல்களில் அதிகம் சாப்பிடுவது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது.
வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரித்துக் காணப்படுகிறது.
பெண்கள் பொதுவாக உடல் உழைப்பு குறைந்து போவது, சிலருக்கு உடலுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் உள்ளன.
உடல் எடையைக் குறைக்க நாம் தினமும் அருந்தும் சாதாரண தண்ணீரில் சோம்பு கலந்து குடியுங்கள். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கலாம். இது உங்களுடைய தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளலாம். இந்த தண்ணீரை நாள் முழுவதும் அருந்தலாம்.
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையைக் குறைக்க வழிவகை செய்கிறது.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடல் அழகு பெறும்.
இதுபோல அடுத்த நாள் தண்ணீரில் சீரகம் சேர்த்தும் குடிக்கலாம். ஒருநாள் சீரகம், ஒருநாள் சோம்பு சேர்த்து அருந்தலாம்.
உணவிலும் சீரகம், சோம்பு ஆகியவற்றை அடிக்கடி சேர்த்து வந்தால் உடலில் மாற்றங்களைக் காணலாம். சுரைக்காய், சௌ சௌ போன்ற நீர்க்காய்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவுப் பொருள் மட்டுமே உடல் எடையைக் குறைக்காது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது உடல் எடையை படிப்படியாக குறைக்கும்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.