முகப்பு
ஸ்பெஷல்

ஐம்பதில் பாட்டியாக மட்டுமில்லை டான்ஸ் கம்பெனி முதலாளியாகக் கூட மாறலாம்!

இந்த நடனக் குழுவின் சிறப்பு என்னவென்றால் ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள் இடம் பெறுவதுதான். சிலரது வயது எழுபது. நடனக் குழுத் தலைவி பியூமியே சொல்கிறார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

புதுமையாகவும் இருக்க வேண்டும்... அதே சமயம் சாதனையாகவும் அமைய வேண்டும். இப்படி வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள்  சிலரே. வயது ஐம்பத்தைந்து ஆகிவிட்டால் தாங்கள் முதுமைப் பயணத்தைக்  தொடங்கிவிட்டதாகக் கன்னத்தில் கை  வைத்துவிடுவார்கள். விரக்தியாகப் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் சிலர்  அந்த ஐம்பத்தைந்து வயதில்தான் சில புதிய துவக்கங்களை நிகழ்த்துகிறார்கள். எனக்கும் தனித்துவம் உண்டு.. என்று மாற்றி யோசித்து ஒரு முன்மாதிரியாக மாறுகிறார்கள்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பியூமியே டாக்கினோவை எடுத்துக் கொள்ளுங்கள். இவர் தன் தோழிகள் இருபது பேருடன் சேர்ந்து, "பாம் பாம்'  என்னும்  (Cheer Leading) நடனக் குழு  ஒன்றினை நடத்தி வருகிறார்.  இந்த நடனக் குழுவின் சிறப்பு என்னவென்றால் ஐம்பத்தைந்து வயதைக்  கடந்தவர்கள் இடம் பெறுவதுதான். சிலரது வயது எழுபது. நடனக் குழுத் தலைவி பியூமியே சொல்கிறார்:

"என் இளமை பருவத்தில் "சியர் லீடிங்'  என்று சொல்லும்  பிறரை உற்சாகப்படுத்துவது  பற்றி  எனக்கு  தெரியாது.  ஐம்பத்திமூன்றாம்  வயதில் டெக்ஸாஸில் சென்று படிக்க விரும்பினேன். ஆனால் குடும்பத்தில் பெரியவர்கள்   நான்  டெக்ஸாஸ்       போகக் கூடாது.. கடல் தாண்டிப்   போய் படிக்கிற வயசா   என்ன.. ம்ஹூம்.. படிக்கக் கூடாது...  என்று  தடை போட்டார்கள்.  மறுபுறம், என்  விருப்பத்திற்கு  என் குழந்தைகள் ஆதரவு தந்தார்கள். அது போதுமே.. அந்த  உற்சாகத்தில்  தடைகளை மீறி, வடக்கு டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில்  முதியோரியல்  பட்டப்படிப்பில் சேர்ந்து வெற்றி பெற்றேன்.  என் கணவர் எனக்கு அறுபது வயதான போது    என்னை விட்டுப்  பிரிந்து சென்றார். விவாக ரத்து. 

அந்த  பிரிவுக்குப் பிறகுதான்  எனக்கு ஒரு திருப்பம்  வந்தது.  சும்மா  வீட்டில் இருந்து பொழுதை வெட்டியாக  வீணாக்க வேண்டாம் என்று முடிவு செய்து, இந்த நடனக் குழுவை ஆரம்பித்தேன். மக்கள் இந்த நடனத்தை விரும்பிப் பார்ப்பதால்,  இருபது  வருடங்களாக  வெற்றிகரமாக  நடன நிகழ்ச்சிகளை   நடத்தி வருகிறேன் என்கிறார்.  டாக்கினோவின் வயது  தற்சமயம் எண்பத்திநான்கு.   

இந்த வயதிலும் மூப்பை தன் பக்கம் அண்டவிடவில்லை. எல்லாம்  இந்த நடனத்தின் கைங்கரியம்தான். மன, உடல் ரீதியாக  இந்த நடனம் உற்சாகம் தந்துவருகிறது. அதனால் தினமும் சுறுசுறுப்பாக  இயங்க முடிகிறது. அதனால் கவலைகள்  மனதில்  குடியேறுவதில்லை.  வயதாகிறதே  என்ற நினைப்பும் வருவதில்லை.  இதன் காரணமாக  தினமும் சுறு சுறுப்பாக  இயங்க முடிகிறது.   மற்றவர்களையும் இயக்க முடிகிறது.  ஒரேயொரு விதி  ஏனென்றால், இந்த நடனக்   குழுவில்  சேர  பெண்களுக்கு   குறைந்தது  ஐம்பத்தைந்து வயதாகியிருக்க   வேண்டும்''  என்கிறார் டாக்கினோ.

முழு கட்டுரையைப் படிக்க →