ஸ்பெஷல்

தமிழ் மற்றும் குஜராத்தியில் ஆன்லைன் அகராதிகள்! ஆக்ஸ்போர்டின் புதிய அறிமுகம்!

ANI

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்திய மொழிகளில் இணைய அகராதிகளை உருவாக்கி வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் தமிழ் மற்றும் குஜராத்தி மொழிகளில் ஆன்லைன் அகராதிகள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதற்கு முன்னர் இந்தி அகராதியை அறிமுகப்படுத்தியிருந்தனர்.

ஆக்ஸ்போர்டு குளோபல் மொழிகள் (OGL) இதற்கான முன்முயற்சியை 2015- ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிவிட்டது. உலகின் 100 மொழிகளிலும் அகராதிகள் மற்றும் மொழியியல் ஆதாரங்களை உருவாக்கவும், ஆன்லைனில் கிடைக்கும்படி செய்ய இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. அவரவர் மொழியின் உள்ளடக்கத்தை டிஜிட்டல் வடிவில் கிடைக்கச் செய்வதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். தங்களுடைய மொழி வலைத்தளங்களில், செயலிகளில், பல்வேறு கருவிகள் மற்றும் சேவைகளில், காணக் கிடைப்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்’ என்கிறது OUP (ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ்).

OGL எனப்படும் இத்திட்டம் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸின் மிகச் சீரிய முயற்சி ஆகும். இதை திட்டமிட்டமடி செயல்படுத்துவது மிகப் பெரிய சவால்,  இது அனைவருக்கும் பயன்படும் அற்புத சுரங்கம்’ என்று ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியின் இயக்குனர் ஜூடி பியர்சல் கூறினார், 

உலககெங்கிலும் டிஜிட்டல் தகவல் தொடர்பைப் பொருத்தவரையிலும், ஆங்கிலம், சீனம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்படியான ஒரு சூழலில் மற்ற மொழிகளுக்கான இடங்களை நிறுவவதில் உடனடியாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

OGL என்ற இந்த திட்டத்துக்காக நாங்கள் நிறைய மொழிகளை தேடிக் கொண்டிருந்தபோது,  இந்திய மொழிகளில் சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கினோம்’என்று பியர்சல் கூறினார்.

'இந்திய மொழிகளின் செழுமையும் வரலாறும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய செறிவு உலகில் ஒருசில மொழிகளில் மட்டுமே காணப்படும். இந்தியாவில் 35 சதவிகித மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றபடியால், உலக மொழிகளுக்கான வளங்களை உருவாக்கி, டிஜிட்டல் தொடர்புக்கு உதவ OGL இன் பணி எப்போதையும் விட தெளிவாக உள்ளது’ என்று அவர் கூறினார்

கடந்த ஆண்டு இந்தி ஆன்லைன் அகராதி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் குஜராத்தி பதிப்புகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸின் இந்திய நிர்வாக இயக்குனர் சிவராமகிருஷ்ணன் வெங்கடேஸ்வரன் கூறுகையில், 'இத்தகைய டிஜிடல் வடிவமைப்புகளில் ஆன்லைன் அகராதிகள் அனேக மொழிகள் எந்த நேரமும் விரல் நுனியில் கிடைக்கப் பெறுவது கல்வியின் தரத்தை மேம்படுத்தி கற்றலை எளிமையாக்கிவிடுகிறது’ என்றார்.

OGL-லின் மற்றொரு முயற்சி ஒரு புதிய மொழிக்கான தரவு தளத்தை உருவாக்குவதாகும். இது மொழிகளுக்குகிடையே உள்ளடக்கங்களில் பல இணைப்புகளை வழங்குகிறது. ஆக்ஸ்ஃபோர்டு அகராதி LEAP என்ற ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது, இதில் தரவுத் தொகுப்புகள் தரப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைக்கப்படுகின்றன, அதன்பின் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால், பலவிதமான மொழிகளும் ஒரே தளத்தில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது பயன்பாட்டுக்கும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தமிழ் மற்றும் குஜராத்தி மொழிகளை இணைத்தபின் ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இத்தகைய செறிவான மொழிக்கான அகராதியை பரந்துபட்ட மக்களுக்காக உருவாக்குவது மகிழ்ச்சி என்று மூத்த தயாரிப்பு மேலாளர் பிலிப் ரெய்மான் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT