ஸ்பெஷல்

உணவுக் கழிவுகளில் இருந்து கேஸ் சிலிண்டர் கண்டுபிடித்து அசத்திய சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள்!

RKV

உணவுக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு கலனைக் கண்டுபிடித்து சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தியுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த குப்பைக்காரன் குழு இளைஞர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலொன்று தான் வீட்டில் கிடைக்கும் உணவு மற்றூம் காய்கறிக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் இயந்திரத்தை இளைஞர்கள் அறிமுகப்படுத்திய புதுமை.

1 கிலோ இயற்கைக் கழிவுகளைப் பயன்படுத்தி 30 நிமிடங்கள் முதல் 50 நிமிடங்கள் வரை சமையல் செய்ய முடியும் என அவர்கள் செயல்முறையில் நிரூபித்துள்ளனர். இதனால் சமையல் எரிவாயு செலவு மிச்சமாவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியுமென அந்த இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உற்பத்தியாகும் உணவுக் கழிவுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த பிளாண்டில் போட்டீர்கள் எனில் அதிலிருந்து கேஸ் உருவாகும். இதை நீங்கள் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தி வரும் எல் பி ஜி கேஸ் சிலிண்டர்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். அதனால் நமக்கு காசு மிச்சமாவதுடன் கழிவுகளையும் பயனுள்ள வகையில் பயன்படுத்திய திருப்தியும் கிடைத்த மாதிரி இருக்கும் என்கிறார் சேலம் குப்பைக்காரன் குழு எனும் தன்னார்வ தொண்டு அமைப்பாளர்களில் ஒருவரான கெளதம்.
இளைஞர்களின் இந்தப் புது முயற்சியைப் பற்றிப் பேசுகையில் மாநகர் நல அலுவலரான பார்த்திபன் என்ன சொல்கிறார் என்றால், 
‘இந்த கலனால் இரண்டு பலன்கள் உண்டு. ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு. குப்பைகளை ... குப்பை மேட்டில் வீசுவதால் அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் அப்படியே காற்றில் கலந்து துர்நாற்றம் அடிப்பதோடு சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தக் கூடும். அதை இந்தக் கலனை உபயோகப் படுத்துவதின் மூலம் தவிர்க்கலாம் என்பது  ஒரு நன்மை. மற்றொரு நன்மை என்னவென்றால் வீட்டுக் கழிவுகளை வீணாக்காமல் அவற்றிலிருந்து கேஸ் தயாரித்து அதை சமையலுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பது வீட்டின் சிக்கன நடவடிக்கைக்கும் உதவியாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT