ஸ்பெஷல்

பள்ளிகளில் தோல்பாவைக் கூத்து வகுப்புகள் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு!

மதுரை மாவட்டப் பள்ளிகளில் தோல் பாவைக்கூத்து கலைப்பயிற்சி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மதுரை, ஜூலை 2: மதுரை மாவட்டப் பள்ளிகளில் தோல் பாவைக்கூத்து கலைப்பயிற்சி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியைச் சோ்ந்த தோல் பாவைக்கூத்து கலைக்குழுத் தலைவா் ஏ.முத்துலட்சுமண ராவ், மதுரை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில்; ‘எங்கள் குழுவின் சார்பில் பாரம்பரிய தொல்கலைகளில் ஒன்றான தோல் பாவைக் கூத்து கலையை பலருக்கு கற்றுத் தருகிறோம். எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தோல்பாவைக் கூத்து வகுப்புகள் நடத்த அனுமதி அளித்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி மும்பையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

SCROLL FOR NEXT