ஸ்பெஷல்

‘ப்ரியமீனா மனோகரன்’  யூடியூப் வருமானத்தை சப்ஸ்கிரைபர்களுக்கே பகிர்ந்தளித்துக் கொண்டாடும் வித்யாச யூடியூபர்!

ஜேசு ஞானராஜ்

"தனக்குப்போகத்தான் தான தர்மம்" ன்னு சொல்வாங்க. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் இந்த மதுரைக்காரப்  பெண்மணியோ, தன் Youtube subscriber களுக்குப் போகத்தான் மீதி  என்று, சமீபத்தில் தன் வருவாயில் ஒரு பெரிய பங்கை அவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். வேலை, குடும்பத்தை நிர்வகித்தல், Youtuber என்று பன்முகத்தன்மை கொண்ட இவருக்கு ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு லட்சத்திற்கும்  மேலான subscriber கள்.

"வணக்கம்" என்று இவர் சொல்லும் போதே, இவரின் Youtube சேனலை பார்ப்பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. மேற்கத்திய Halloween day முதல் நம்மூர் தீபாவளி வரை இவர் வெளியிட்டுள்ள அனைத்து வீடியோக்களுமே  தெறி ஹிட். தன் குடும்பம், Youtube சேனல் ஆரம்பித்தது, அதில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீண்டது எப்படி? என்று நம்முடைய  பல கேள்விகளுக்கு  உற்சாகமாகப்  பதிலளித்தார் "ப்ரியமீனா மனோகரன்" எனும் Youtube சேனலை நடத்தி வரும் ப்ரியமீனா மனோகரன் அவர்கள். 

இதோ அவரது பிரத்யேகப் பேட்டி...

அமெரிக்காவில் தமிழில் Youtube சேனல்... எப்படி?

நான் பக்கா மதுரைக்காரப் பொண்ணுங்க. கணவர் பெயர் செந்தில். அமெரிக்காவில் வேலை. நான் மதுரையில் உள்ள நேஷனல் இஞ்சினியரிங் காலேஜில் B.E  படித்தேன். படிப்பு முடிந்ததும் திருமணம். உடனே நானும் அவருடன் நியூயார்க் வந்துவிட்டேன். இங்கே ஒரு கம்பனியில் Project Coordinator ஆக இருக்கிறேன். மகன் ஆதர்ஷ்,  9 அம் வகுப்பு  படிக்கிறார். மகள்  சாராஸ் மழலையர் பள்ளியில்   படிக்கிறார். அளவான குடும்பம், சந்தோஷமான வாழ்க்கை.

Youtuber ஆகும் எண்ணம் எப்படி வந்தது?

நான் எங்க அம்மா மாதிரி, ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கனும்னு நினைப்பேன். அதோட செயல்லயும் இறங்கிடுவேன். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சும்மா தானே இருக்கோம், ஏதாவது உருப்படியா பண்ணலாமேன்னு யோசிக்கும் போது கிடைச்சது தான் இந்த Youtube சேனல் ஆரம்பிக்கும் ஐடியா.

தொடக்கத்தில் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு?

இந்த சேனலை ஆரம்பிக்கப்போறேன்னு சொன்னதும் என் கணவர் பச்சைக் கொடி காட்டியதோடு நிறைய யோசனைகளையும் கூறினார். அது எனக்கு உத்வேகமாக இருந்தது. உதாரணமாக, என்னோட பட்டுப் புடவைகள் கலெக்ஷன் பற்றி ஒரு வீடியோ போடச்சொன்னார். அது எவ்வளவு பெரிய ஹிட்டுன்னு அந்த viewing count ஐப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.

Turning Point னு சொல்வாங்களே! அது உங்களுக்கு எந்த வீடியோவில் வந்தது?

எங்க Anniversary கொண்டாட்டத்தை வீடியோவாக வெளியிட்டிருந்தேன். அந்த வீடியோ தான் எனக்குப் பல Subscriber களைப் பெற்றுத் தந்தது. பெட்ரோல் பங்க்ல காருக்கு பெட்ரோல் போடும் போது, கட  கடனு அந்த மீட்டர் ஓடுமே! அது மாதிரி 500, 600 னு என் Subscriber எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போனது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. இந்த நேரத்தில் என்னுடைய அனைத்து Subscriber களுக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

எவ்வளவோ சேனல் இருக்க, உங்களோட இந்த Youtube சேனல் மிகவும் பிரபலமாக என்ன காரணம்னு நினைக்கிறீங்க?

தனித்துவம் தாங்க. நான் யாரையும் காப்பி அடிக்கிறதில்லை. அது மட்டுமல்ல. காப்பியடிக்கும் போது, நம் சுயத்தை இழந்து விடுகிறோம். ஒரு கட்டத்துக்கு மேல என்ன பண்ணனும்னு நமக்கே புரியாது. அதனால, எனக்கு என்ன வருமோ, அதைத்தான் நான் பண்றேன். இதை ப்ரியமீனா ஸ்டைல்னு வெச்சிக்கலாம். எனக்கு இது பிடிச்சிருக்கு.

பெண்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் Harassment பிரச்சினையை  எப்படி உடைத்து வெளிவந்தீர்கள்?

தொடக்கத்தில் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. மனதளவில் ரொம்ப சோர்ந்துவிட்டேன். அந்த சமயத்தில் என் கணவர் மிகவும் சப்போர்ட்டாக இருந்தார். அடுத்தடுத்து என் வீடியோக்கள் ஹிட்டாகி பார்வையாளர்கள் அதிகமானவுடன் என் சப்ஸ்கிரைபர்களே இந்த எதிர்மறையாளர்களுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிவிட்டனர். அது மட்டுமல்ல. Fake Id பெயரில் தப்பா கமெண்ட் போடுறவங்களைப்பத்தி தனியாக ஒரு வீடியோவே வெளியிட்டேன். அப்புறமென்ன! துண்டைக்  காணோம் துணியைக்  காணோம்னு ஓடிட்டாங்க. மதுரைக்கார பொண்ணாயிற்றே! தைரியமும் என் கூடவே பிறந்தது.

குடும்பத்தை நிர்வகித்தல், அலுவலக வேலை, Youtuberன்னு தொடர்ச்சியா இயங்கும் போது 24 மணி நேரம் போதுமா?

Scheduling ரொம்ப முக்கியம்னு நான் நினைக்கிறன். சுவர் இருந்தாத்தானே சித்திரம் வரைய முடியும். அதனால நான் Health க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறேன். அப்புறம் குடும்பம், அடுத்து வேலை அப்புறம் சனிக்கிழமைகளில் Youtue வீடியோ என்று நேரத்தைப் பிரிச்சுக்கிறதால எனக்கு ஈஸியா  Manage பண்ண முடியுது.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு உங்களின் Advice என்ன?

"மங்கையராய்ப்  பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" னு கவிமணி சொன்னதை நல்லா ஞாபகத்துல வச்சுக்குங்க. அது தான் நம்மளோட மிகப்பெரிய ப்ளஸ். அடுத்து, தைரியமாய் செயல்ல இறங்குங்க. எட்டு எட்டா ஏறினா, இமய மலையும் நம் காலடியில் தான். அது மாதிரி, தினமும் ஒரு சதவீதம் வேலை செய்தாலே வருடக் கடைசியில்  365% வேலை செய்து முடித்திருப்போம். இது எத்தனை மடங்கு அதிகம்னு யோசிச்சிப் பாருங்க. அப்போ நீங்களே உங்க காலரைத் தூக்கி விட்டுக்குவீங்க.

உங்களின் எதிர்காலத்திட்டம்?

பணம் நிறைய சம்பாதிக்கணும்னு நான் என்னைக்குமே நினைச்சதில்லை. அதனால் தான் என்னுடைய வருமானத்துல ஒரு பங்கை என் Subscriber களுக்கு கொடுத்து, அவங்க மகிழ்ச்சியில நான் சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். குடும்பத்தைப் பொறுத்த வரையில் பிள்ளைகள் படிப்பில் ரொம்ப கவனமாக இருக்கிறேன். "பிள்ளைகளிடம் தோற்றுப் போவது தான் பெற்றவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி" ன்னு சொல்வாங்களே! அந்த வெற்றிக்காக காத்திருக்கிறேன்.

சொல்லி வைத்து கில்லி அடிப்பது போல தன் வாழ்க்கையில் வேலை, குடும்பம், யூடியூபர் எனும் தனிப்பட்ட விருப்பம் போன்ற அத்தனை இலக்குகளையும் மிகச்சரியாக ஷெட்யூலிங் செய்து வைத்துக் கொண்டு அனைத்திலுமே வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ப்ரியமீனாவின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT