ஸ்பெஷல்

மானுட கிருஷ்ணர் கடவுளான கதை!

எளியவர்களின் காப்பாளானாக அவதரித்த கிருஷ்ணன் அன்று அதிகாரத்தை தங்களிடம் வைத்துக் கொண்டு குலத்தளவில் மேல்தட்டில் இருந்த சத்ரியர்களின் அராஜகத்தை எதிர்த்து சத்ரியர் அல்லாத பிற இனக்குழு தலைவர்களை

RKV

கிருஷ்ணர் மகாபாரத காலத்தில் கடவுள் இல்லை. அன்று அவர் யது குலத்தில் பிறந்த மானுடரே. யதுக்கள் மேய்ச்சல் நிலங்களில் வாழ்ந்து வந்தனர். அவர்களது தொழில் ஆநிரைகளை வளர்ப்பதும், பால் பொருட்களை உற்பத்தி செய்து மதுரா நகரத்துச் சந்தைகளில் விற்றுப் பொருளீட்டுவதுமே! அது மட்டுமல்ல  இவர்கள் தாய்வழிச் சமுதாய மரபைப் பின்பற்றியவர்கள். தாயே குடும்பத்தின் தலைவி. குடும்பத்தின் பெண் வாரிசுக்குப் பிறக்கும் ஆண்களே அரசாளும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள்... வேதகால நாகரீகத்தின் நீட்சியான மகாபாரத இதிகாச காலத்தில் வேதங்களின் பெயரைச் சொல்லி கணக்கற்ற ஆநிரைகளும், அஸ்வங்களும் (குதிரைகள்) யாகங்களில் பலியிடப்பட்டு மக்களில் ஒருசாரரது வாழ்வாதாரங்கள் குலைக்கப்படுகையில் இயல்பிலேயே அவர்கள் கிளர்ந்தெழத் தயாராக இருந்தார்கள். அப்போது கிருஷ்ணன் அவதரித்தான்.

சாமான்ய மக்களின் தலைவன் ஆனான். எளியவர்களின் காப்பாளானாக அவதரித்த கிருஷ்ணன் அன்று அதிகாரத்தை தங்களிடம் வைத்துக் கொண்டு குலத்தளவில் மேல்தட்டில் இருந்த சத்ரியர்களின் அராஜகத்தை எதிர்த்து சத்ரியர் அல்லாத பிற இனக்குழு தலைவர்களை ஒருங்கிணைக்கும் கருவியானான். இறுதியில் அராஜகத்தை எதிர்த்து போரிடத் தயங்கிய அர்ஜூனனுக்கு கீதாஉபதேசம் செய்து போரிடத் தூண்டி அவனே கர்த்தாவுமாகி போர் முடிவில் காரியமும் ஆனான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT