தொழில்நுட்பம்

ஜியோமி வழங்கும் ரெட்மி 4 இப்போது இந்தியாவில்!

IANS

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 4 மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த செவ்வாய்கிழமை அறிமுகமாகி கடைகளில் அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இது ஜியோமியின் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ரெட்மி 4 மாடலுடன் எம் ஐ ரெளட்டர் 3சி தரப்படுவது கூடுதல் சிறப்பு.

ரெட்மி 4 மூன்று வித்தியாசமான மாடல்களில் வெளியாகிறது. 2GB RAM+16GB, இரண்டாவது 3GB RAM+32GB 9999 ரூபாய்க்கும், 3மற்றது 4GB RAM+64GB. இதன் விலைகள் முறையே ரூ 6,999, ரூ 8,999 மற்றும் ரூ 10,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரவுள்ளது. மே 23ம் தேதி நண்பகல் 12 மணிக்கு எம்.ஐ மற்றும் ப்ளிப்கார்ட் இணையதளங்களில் ஃப்ளாஷ் சேல் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று உறுதி செய்கிறார்கள் மி.காம் மற்றும் அமேசான்.இன் நிறுவனங்கள்.

ரெட்மி நான்கை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்கிறோம். இது ரெட்மி 3S-ன் அடுத்த பதிப்பாகும். நிச்சயம் இந்த ரெட்மி 4 திருப்திபடுத்தும் என்று நம்புகிறோம். தரம் மற்றும் விலை அனைவராலும் வாங்கக் கூடிய வகையில் உள்ளது என்றார் ஜியோமி நிறுவனம் இந்திய கிளையின் தலைமை நிறுவனர் மனு ஜெயின்.

5 inch ஹெச் டி டிஸ்ப்ளே, குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 435 ஆக்டா கோர் ப்ராஸசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த போன். இதற்கு முன்னர் வெளிவந்த வெர்ஷனில் ஸ்னாப்ட்ராகன் 650 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் ரெட்மி நோட் 3-ஐ காட்டிலும் இதன் பேட்டரி திறன் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 4100mAh  பேட்டரி திறன் கொண்ட சற்று பெரிய பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தில், ஆன்ட்ராய்டு N இயங்குதளம் கொண்டு இந்த போன் இயக்கப்படுகிறது. இதன் கேமரா 13 மெகாபிக்சல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எம் ஐ ரெளடர் (Mi Router) பொருத்தவரை மே 20 முதல் எம் ஐ இணையதளத்திலும் மே 23 முதல் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஜூன் 8 முதல் கிடைக்கும். இதன் விலை ரூ.1,199/-

அதிரடியாக சிறந்த தொழில்நுட்பத்துடனும் குறைந்த விலையிலும் களம் இறங்கியுள்ள ஜியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கான இடத்தை பிடித்து தக்க வைத்துக் கொள்ளும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT