தொழில்நுட்பம்

சீனாவிலிருந்து வெளியேறும் அமேஸான் கிண்டில்

தினமணி


அமேஸான்.காம் நிறுவனம், கிண்டில் எண்ம புத்தக வணிகத்தை சீனத்தில் நிறுத்திக் கொள்ள முடிவு செய்து அறிவித்துள்ளது.

அமேஸானின் கிண்டில் எனப்படும் எண்ம புத்தக வணிகம் நிறுத்தப்படுவது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஏற்கனவே கிண்டில் சாதனங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் கிண்டில் சீனா இ-புத்தகக்கடை சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிண்டில் செயலியானது, இன்னும் ஓராண்டுகள் கூடுதலாக பயன்பாட்டில் இருக்கும். ஏற்கனவே வாங்கிய இ-புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்க பயனாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  ஆனால், 2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் கிண்டில் சாதனங்களிலிருக்கும் புத்தகங்களைப் படிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT