நிகழ்வுகள்

 டிசம்பர் 20 ல் இலவச தையல் - ஆயத்த ஆடைப் பயிற்சி!

​ எ‌ம்.​ஞா​ன‌​சே​க‌ர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளிரியல்துறையும், மத்திய ஜவுளித்துறை, ஐ.எல்.எப்.எஸ் - சிடிஐ இணைந்து நடத்தும் இலவச தையல் - ஆயத்த ஆடைப் பயிற்சி.
இந்தப் பயிற்சி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
18 - 38 வயதுள்ள ஆண் - பெண் இருபாலாரும் இந்த இலவசப் பயிற்சி பெறத் தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
ஜவுளி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நவீன மின் இயந்திரங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிகென சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருள் பேக்கேஜ் மூலம் பயிற்சி அளிக்கப்படும். 
பயிற்சி முடித்தவர்களுக்கு பல்வேறு டெக்ஸ்டைல் கம்பெனிகளில் வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும். 
அப்படி வேலை செய்ய விரும்பவில்லை, சுயதொழில் செய்யவே ஆர்வம் என்று சொல்பவர்களுக்கு, அதற்கான கடன் உதவி பெற உதவி செய்யப்படும். 
இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ இரண்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் ஆகியவற்றுடன் திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறையை அணுக வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: 0431 - 2333223 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT