உடல் நலம்

உடல் சோர்வைப் போக்கும் 'பன்னீர் திராட்சை'

DIN

திராட்சைகளில் சில வகைகள் இருப்பினும் பன்னீர் திராட்சை அதிக மருத்துவ குணம் கொண்டது. 

இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.

புளிப்புத்தன்மை குறைவாக சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் பன்னீர் திராட்சையில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் சக்தியை கொடுப்பதால் இதனை எடுத்துக்கொள்ளலாம். 

திராட்சையில் உள்ள விதை புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது என்பதால் அனைவரும் சாப்பிடலாம். 

மேலும் பன்னீர் திராட்சை உடலில் உள்ள கெட்ட நீர், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்றுகிறது. 

ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரணக் கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குகிறது. 

வெயில் காலங்களில் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகிறது. 

உடல் திறன் குறைந்து உடல் வலிமையின்றி சோர்வாக இருபப்வர்கள் பன்னீர் திராட்சை சாப்பிட சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒட்டுமொத்த உடல் உறுப்புக்கள் வளர்ச்சிக்கும் உதவும்.

தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும். 

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு திராட்சை சாறு சிறந்த தீர்வாக இருக்கும். பெண்களுக்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT