உடல் நலம்

உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?

DIN

பூஞ்சை வகையைச் சேர்ந்த காளானை ஆண்டாண்டு காலமாக உணவில் சேர்த்து வருகிறோம். அனைத்து வகையான காளான்களும் உண்ணக்கூடிய காளான் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. காளான்களின் விஷக் காளான்களும் இருக்கின்றன. எனவே, காளான் வாங்கும்போது கவனம் தேவை. 

♦காளான்கள் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

♦ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் அடைப்பை சரி செய்கிறது. இதனால், உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளைத் தடுக்கிறது. 

♦மூட்டு வலி, வாதம், மலட்டுத் தன்மை ஆகியவற்றுக்கு சிறந்த வலி நிவாரணியாகும். 

♦ பெண்களுக்கு கருப்பை நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 

♦ காளான் சேர்த்துக்கொள்வதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 

♦ மலச்சிக்கலைத் தவிர்க்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

♦ நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது. 

♦பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் டி காளானில் அதிகம் காணப்படுகிறது. 

♦ உடல் எடையைக் குறைப்பதில் காளானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. லேசான உடற்பயிற்சியுடன் தினமும் காளான் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும். 

♦ உடலில் கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. குறைந்த கலோரி உணவுகளில் காளானுக்கு முக்கிய இடமுண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT