கோப்புப் படம் 
உடல் நலம்

குக்கரில் சாதம் வைக்கிறீர்களா? எச்சரிக்கை!!

குக்கரில் சாதம் வைப்பது சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

DIN

பரபரப்பாக இயங்கிகொண்டிக்கும் இந்த வாழ்க்கைச் சூழலில் சமையலையும் பரபரவென்று முடித்துவிட வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். பெண்கள் இன்று வேலைக்குச் செல்லும் சூழல் இருப்பதால், சமையலை விரைந்து முடிக்க வேண்டும் என்று, அவர்களில் பெரும்பாலாக அனைவரும் இப்போது பயன்படுத்தும் ஒரு பொருள்தான் பிரஷர் குக்கர்.

காய்கறிகள், கிழங்குகள் வேகவைப்பதற்கு மட்டுமின்றி இப்போது சாப்பாட்டில் முதன்மையான சாதம் வைப்பதற்கும் குக்கரைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரணமாக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் அரிசி போட்டு தேவையான உப்பும் சேர்த்து வெந்தபிறகு வடித்து எடுக்கக் குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகிறது. ஆனால் 10 நிமிடம் வேகவைத்த அரிசியை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றினால் 2- 3 விசில்கள் அடித்து 10 நிமிடத்தில் சாதம் ரெடியாகிவிடுகிறது.

இது எளிதான வேலையாகவும் இருக்கிறது, நேரமும் மிச்சமாகிறது. எனினும் உடலுக்கு நல்லதா? என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்களின் பதிலாக இருக்கிறது.

ஸ்டார்ச் அதிகமிருக்கும் அரிசியை அப்படியே குக்கரில் வேகவைக்கும்போது அதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும், மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். தற்போது உடல் எடை அதிகரிப்பிற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

உடல் உழைப்பும் அதிகமாக இல்லாத இந்த சூழ்நிலையில் கார்போஹைட்ரேட் அதிகம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல என்கின்றனர்.

அதனால் எப்போதாவது ஒருநாள் அவசரத்திற்கு வேண்டுமானால் குக்கரில் சாதம் வைக்கலாம். ஆனால் தினமும் பயன்படுத்துவது நல்லதல்ல.

மாறாக, பாத்திரத்தில் அதிக அளவு தண்ணீர் வைத்து அரிசி போட்டு வேகவைத்து ஸ்டார்ச் மிகுந்த தண்ணீரை வடித்துவிட்டு சாப்பிடுவதுதான் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

அதேநேரத்தில் காய்கறிகளை வேகவைக்கும்போது சிலர் தண்ணீர் அதிகம் வைத்து அதனை வடிகட்டி, கொட்டிவிடுவார்கள். இப்படிச் செய்தால் காய்கறிகளில் உள்ள சத்துகள் அனைத்தும் போய்விடும். குறைந்த அளவு தண்ணீர் வைத்து வேகவைக்கலாம் அல்லது வடிகட்டிய தண்ணீரை உப்பு, மிளகுத் தூள் போட்டு குடித்துவிடலாம். ஏனெனில் அந்த தண்ணீரில் ஒட்டுமொத்த காய்கறிகளின் சத்துகளும் வந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

SCROLL FOR NEXT