மக்களைவைத் தேர்தல் 2019

பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர்!

எழில்

பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், பாஜகவில் இணைந்துள்ளார்.

மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர். இதையடுத்து, விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் கம்பீர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதத் தொடக்கத்தில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பாஜகவில் இணைந்தார். இதையடுத்து தற்போது பாஜகவில் கம்பீரும் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றார். இந்தியாவின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கம்பீர் கடந்த 2004 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். 9 சதம், 22 அரை சதத்துடன் 4199 ரன்களையும், ஒருநாள் ஆட்டங்களில் 2003 முதல் 2013 வரை ஆடி 11 சதம், 34 அரை சதங்களுடன் மொத்தம் 5238 ரன்களை குவித்தார். குறிப்பாக 2011 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா, தில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார் கம்பீர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT