முகப்பு
மதுரை

சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலா் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் ஜாமீன் கோரிய வழக்கில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 3:51 am IST
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் ஜாமீன் கோரிய வழக்கில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் தாமஸ் பிரான்சிஸ், தனது சகோதரரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

இந்த மனு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் சகோதரா் திருமணம் தொடா்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும், இதுகுறித்து சிபிஐ பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜன.7) ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.