மகளிர்மணி

பூ மாதிரி இட்லி செய்ய.... சமையல் டிப்ஸ்!

பூ மாதிரி இட்லி செய்ய சமையல் ஆலோசனை.

தினமணி செய்திச் சேவை

பூ மாதிரி இட்லி செய்ய...

கறுப்பு உளுந்தில் தோசை மாவைப் புளிக்க வைக்கும் பாக்டீரியா அதிகமாகவும், தோல் நீக்கிய வெள்ளை உளுந்தில் குறைவாகவும் உள்ளது. இதனால் மாவு புளிப்பதில் வேறுபாடு ஏற்படுகிறது. எனவே, தோலுடன் கூடிய உளுந்தையே ஊற வைத்து, தோல் நீக்கிப் பயன்படுத்தினால் இட்லி பூ மாதிரி இருக்கும்.

சாப்பிடக் கூடாதவை...

தோல் வியாதி உள்ளவர்கள் கத்தரிக்காயையும், மூட்டு நோய் உள்ளவர்கள் முருங்கைக்காயையும், வயிற்றுவலி உள்ளவர்கள் மாங்காயையும், ஆஸ்துமா நோயாளிகள் புடலங்காயையும், சளி-இருமல் உள்ளவர்கள் பீர்க்கங்காயையும் சாப்பிடக் கூடாது. பொதுவாக இரவில் அவரைக்காய் சேர்க்கக் கூடாது.

இஞ்சி மருத்துவம்

இஞ்சிச் சாறுடன் பாலைக் கலந்து உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

இஞ்சியைத் துவையல் செய்து, சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.

இஞ்சியைப் பச்சடி செய்து உணவுடன் கலந்து சாப்பிட வயிற்று வலி, கபம், களைப்பு நீங்கும்.

இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பில் தோய்த்துத் தின்றால்,

பித்தத்தாலும், கபத்தாலும் தோன்றும் நோய்கள் வருவதில்லை.

-நெ.இராமகிருஷ்ணன்,பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா மீண்டும் சாம்பியன்

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையின் சீரான வளர்ச்சியை அரசு உறுதிசெய்யும்: முதல்வர் ஸ்டாலின்

சன்டே ஜிம் கேர்ள்... மஹிமா குப்தா!

உங்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பதிவேற்றப்பட்டுவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT