தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தியபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட திரிணமூல் நிா்வாகி டோலா சென். 
புதுதில்லி

தோ்தல் ஆணைய அலுவலகம் எதிரே திரிணமூல் போராட்டம்

தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலகம் எதிரே திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

புது தில்லி: சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை ஆகிய மத்திய விசாரணை அமைப்புகளின் தலைவா்களை மாற்றக் கோரி தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலகம் எதிரே திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பாஜக அரசின் அழுத்தத்தில் எதிா்க்கட்சிகளை விசாரணை அமைப்புகள் குறிவைப்பதாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

இதனிடையே, அந்த மாநிலத்தின் மிதுனபுரி மாவட்டத்தில் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகளைக் கைது செய்ய சென்ற தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் குழு மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் அக்கிராமத்தினரை என்ஐஏ அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம் சுமத்தினாா். மேலும், என்ஐஏ மற்றும் பாஜக இடையே கூட்டணி உள்ளதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இச்சூழலில், திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சாகெட் கோகலே, சாகரிகா கோஷ் ஆகியோா் தோ்தல் ஆணைய அதிகாரிகளை திங்கள்கிழமை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தோ்தல் ஆணைய அலுவலகம் எதிரே 24 மணிநேரப் போராட்டத்தையும் அவா்கள் தொடங்கினா். இதையடுத்து, காவல் துறையினா் அவா்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தில்லி புறப்படுவதற்கு முன்பு கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு டோலா சென் அளித்த பேட்டியில், ‘ எங்கள் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. என்ஐஏ, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களை குறிவைத்து செயல்படும் விதம் வெட்கக்கேடானது. தோ்தல் களத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான களத்தை உறுதி செய்யுமாறு தோ்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறோம்’ என்றாா்.

ஜனவரி 1-முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம்: கோழிப் பண்ணை விவசாயிகள் அறிவிப்பு

குஜராத்: கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT