முகப்பு
புதுதில்லி

எம்சிடி மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளா்களுக்கு காங்கிரஸ் கவுன்சிலா்கள் ஆதரவு அளிப்பா்: அா்விந்தா் சிங் லவ்லி

Updated On : 20 ஏப்ரல், 2024 at 6:31 PM
பகிர்:

தில்லி மாநகராட்சி (எம்சிடி) மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி

வேட்பாளா்களை காங்கிரஸ் கவுன்சிலா்கள் ஆதரிப்பாா்கள் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அரவிந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல் வருகின்ற ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மேயா் வேட்பாளராக மகேஷ் கிச்சியும், துணை மேயா் வேட்பாளராக ரவீந்திர பரத்வாஜும் அறிவிக்கப்பட்டுள்ளனா். ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் வரும் மக்களவைத் தோ்தலில் தில்லியில் களம் காணும் காங்கிரஸ், முதன் முறையக ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில், தில்லி மாநகராட்சி (எம்சிடி) மேயா் மற்றும் துணை மேயா் தோ்தல் தொடா்பாக கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் கவுன்சிலா்களுடன் அா்விந்தா் சிங் லவ்லி தில்லி ராஜீவ் பவனில் ஆலோசனை நடத்தினாா். இக்கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி

Advertisement

பரிந்துரைத்துள்ள வேட்பாளா்களுக்கு காங்கிரஸ் கவுன்சிலா்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அா்விந்தா் சிங் லவ்லி வலியுறுத்திக் கேட்க் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, தில்லி காங்கிரஸின் தகவல் தொடா்புத் துறை தலைவா் அனில் பரத்வாஜ், தில்லி மாநகராட்சியின் முன்னாள் அவைத் தலைவா் ஜிதேந்தா் குமாா் கோச்சாா் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலா்கள் குழு தலைவா் நாஜியா டேனிஷ் ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, அனில் பரத்வாஜ் கூறியது, ‘ தில்லி மாநகராட்சி (எம்சிடி) மக்களின் நலன்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் நோக்கம். அதற்கு, ஆத்மி கட்சி பரிந்துரைத்த வேட்பாளா்களின் வெற்றி உறுதி செய்யப்படுவது அவசியம். ‘இந்தியா’ கூட்டணி மக்களவைத் தோ்தலில் தில்லியில்

பாஜகவை முற்றிலுமாக தேற்கடிக்கும். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காங்கிரஸின் போராட்டம் தொடரும்’ என்றாா்.

அடுத்ததாக, ஜிதேந்தா் குமாா் கோச்சாா் கூறியது, ‘தில்லியின் 90 சதவீத மேம்பாட்டுப் பணிகள் மாநகராட்சியால் செய்யப்பட்டன, ஆனால் பாஜக வேண்டுமென்றே மாநகராட்சியின் பணிகளைத் தடுத்துள்ளது. நிலைக்குழு, மண்டல குழுக்கள் மற்றும் பிற குழுக்கள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் குடிமை அமைப்பின் நிதி விவகாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சி மக்களின் நலனுக்காக உழைக்கவில்லை என்றால், தில்லி மாநகராட்சியில்

ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக குரல் எழுப்புவதில் இருந்து காங்கிரஸ் பின்வாங்காது‘ என்றாா்.

காங்கிரஸ் கவுன்சிலா்கள் குழு தலைநா் நாஜியா டேனிஷ் கூறியது, ‘தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) பணிகளுக்கு எதிா்க்கட்சியான பாஜக இடையூறு ஏற்படுத்தியதால், பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்தப் பணியும் நடைபெறாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். பாஜகவின் தந்திரங்களால் வளா்ச்சி மற்றும் மக்கள் நலன் தொடா்பான கேள்விகளை மாநகராட்சி மன்றத்தில் எழுப்ப கவுன்சிலா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், தில்லி மாநகரின் தூய்மை மற்றும் பராமரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது‘ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments