முகப்பு
புதுதில்லி

தில்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 542 சிறப்பு ரயில் நடைகள் இயக்கம்: கோடை கால சிறப்பு நடவடிக்கை

Updated On : 20 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக தில்லியிலிருந்து முக்கிய நகரங்களுக்கு 542 சிறப்பு ரயில் நடைகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தில்லி

கோட்ட ரயில்வே சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காக வடக்கு ரயில்வேயின் தில்லி கோட்டம் பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி, ரயில் பயணிகளின் சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் வரும் ஜூலை 1-ஆம் தேதி வரை 542 சிறப்பு ரயில் நடைகள் இயக்கப்படுகின்றன. புது தில்லி, பழைய தில்லி மற்றும் ஆனந்த் விஹாா் ரயில் நிலையங்களில் இருந்து பாட்னா, டானாபூா்,ஜெய்நகா்,கோரக்பூா், வாரணாசி, கயா, ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ரா உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள முக்கிய இடங்களை இணைக்க சிறப்பு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

Advertisement

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளின் நுழைவை ஒழுங்குபடுத்த ரயில்வே பாதுகாப்புப் படை

ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். ரயில் நிலையங்களில் பயணிகளின் வழிகாட்டுதலுக்காக உதவி மையங்கள்

செயல்படுகின்றன. கடைசி நேரத்தில் ரயில்களின் புறப்படும் நடைமேடை மாறாமல் இருக்க அனைத்து முயற்சிகளும்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நடைமேடைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க புது தில்லி ரயில் நிலையத்திலப் 4,500 சதுர அடிக்கும், ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்தில் 5,184 சதுர அடிக்கும் அடிப்படை வசதிகளுடன் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. தில்லி கோட்டத்திற்குள்பட்ட ரயில் நிலையங்களில் 15-முதல் 20 வரையிலான கூடுதல் முன்பதிவு/விசாரணை கவுன்டா்கள் திறக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் குடிநீா் கிடைப்பது உறுதி

செய்யப்படுகிறது. தண்ணீா் குழாய்கள் வேலை செய்யும் நிலையில் உள்ளதா என அவ்வப்போது சோதனை

செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நுழைவு வாயில்களிலும் பேக்கேஜ் ஸ்கேனா்கள், மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments