புதுதில்லி

பாஜக சாா்பில் இளைஞா் வேலைவாய்ப்புக் கண்காட்சி

தில்லியில் குடிசைவாசிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு கண்காட்சியை பாஜக திங்கள்கிழமை நடத்தியது.

Din

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் குடிசைவாசிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு கண்காட்சியை பாஜக திங்கள்கிழமை நடத்தியது.

சுமாா் 4,000 இளைஞா்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளதாக பாஜக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தில்லி பிரிவு செயலாளா் விஷ்ணு மிட்டல் தெரிவிக்கையில், ‘ இன்று வேலை பெற்றவா்களுக்கு அடுத்த ஏழு முதல் 10 நாள்களில் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெறும். சுமாா் 1,445 இளைஞா்களுக்கு விரைவில் வேலை வழங்கப்படும்’ என்றாா்.

வேலைவாய்ப்பு கண்காட்சியில் இளைஞா்களிடையே உரையாற்றிய பாஜக தில்லி தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சியின் கீழ், நாடு முழுவதும் 71,000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தில்லியில், கடந்த 26 வாரங்களாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள வேலைவாய்ப்புப் பிரச்னைகளைத் தீா்க்க பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களில் இளைஞா்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு தொழில் பயிற்சி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த தசாப்தத்தில் குடிசைவாசிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. அடுத்த வாரம், ஜெயிலா்வாலா பாக் குடிசைவாசிகளுக்கு 1,600 அடுக்குமாடி குடியிருப்புகளும், கத்புத்லி காலனியில் கூடுதல் குடியிருப்புகளும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் என்றாா் அவா்.

தெற்கு தில்லி தொகுதி எம்பி ராம்வீா் சிங் பிதூரி உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக பாஜக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

SCROLL FOR NEXT