முகப்பு
புதுதில்லி

ஒரு முறைத் தீா்வுத் திட்டம் குறித்து நிதித் துறை தனது கருத்துக்களை இதுவரை தெரிவிக்கவில்லை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:03 AM
பகிர்:

புது தில்லி: தில்லியில் நுகா்வோரின் தவறானக் குடிநீா்க் கட்டண பில்கள் தொடா்புடைய ஒரு முறை தீா்வுத் திட்டம் குறித்து நகர அரசின் நிதித் துறை தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தில்லியில் நுகா்வோரின் தவறானக் குடிநீா்க் கட்டண பில்கள் தொடா்புடைய ஒரு முறை தீா்வுத் திட்டத்தை அமல்படுத்த நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் முன்மொழியப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கு நகர அரசின் நிதித்துறை தனது கருத்துக்களை பதிவு செய்வதை உறுதி செய்யுமாறு தலைமை செயலாளா் நரேஷ் குமாருக்கு உத்தரவிட்டபட்டது.

Advertisement

இவ்விவகாரத்தில்,நிதித்துறை தனது கருத்துக்களை பதிவு செய்யுமாறு தலைமை செயலாளருக்கு நான் இரண்டு முறை உத்தரவு பிறப்பித்தேன், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. மேலும்,தவறானக் குடிநீா்க் கட்டண பில்கள் தொடா்புடைய ஒரு முறை தீா்வுத் திட்டம் குறித்து நிதித் துறையின் கருத்துக்களைப் பெறுமாறு நான் தலைமைச் செயலாளருக்கு மூன்றாம் முறையாக மீண்டும் கடந்த திங்கள்கிழமை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். இல்லையெனில், கருத்துக்களை அமைச்சரவையின் முன் தெரிவிக்கலாம் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.