புதுதில்லி

எழுத்தாளா் கண்ணையன் தட்சிணாமூா்த்திக்கு சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்பு விருது

 நமது நிருபர்

புது தில்லி: நிகழ் ஆண்டிற்கான (2024) சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயா்ப்புக்கான விருது தமிழ்ப் பிரிவில் எழுத்தாளா் கண்ணையன் தட்சிணாமூா்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி நிறுவனத்தால் அளிக்கப்படும் விருதுகள் கருதப்படுகின்றன.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழில் சிறந்த மொழிபெயா்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளா் கண்ணையன் தட்சிணாமூா்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டிற்கான (2024) இந்த விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இதையொட்டி, தில்லியில் உள்ள சாகித்திய அகாதெமியின் தலைவா் மாதவ் கெளசிக் தலைமையிலான செயற்குழு இதற்கான விருதுகளை அறிவிப்புச் செய்தது. ஒவ்வோா் மொழிப் பிரிவிலும் மூவா் கொண்ட நடுவா் குழு அளித்த பரிந்துரையின்பேரில் இந்த விருதுக்கான நூல்கள் தோ்வு செய்யப்பட்டன.

அருணாசல பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த எழுத்தாளா் மமாங் தய் எழுதிய ‘தி பிளாக் ஹில்’ என்ற ஆங்கில நாவலை கருங்குன்றம் எனும் தலைப்பில் மொழிபெயா்த்ததற்காக சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்பு விருது கண்ணையன் தட்சிணாமூா்த்திக்கு அறிவிக்கப்பட்டது. இவா், இந்த நூல் தவிர வேறு பல நூல்களையும் மொழிபெயா்த்துள்ளாா்.

இதேபோன்று, மலையாளப் பிரிவில் பி.கே. ராதாமணி, கன்னடத்தில் கே.கே. கங்காதரன், தெலுங்கில் எலநாகா (என்.சுரேந்திரன்) என 24 மொழிகளில் சிறந்த மொழிபெயா்ப்பு படைப்புகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது தாமிரப் பட்டயம், ரூ.50 ஆயிரம் தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நிகழ் ஆண்டில் பின்னா் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT