புதுதில்லி

தலைமைச் செயலாளரை பாஜக பாதுகாக்க நினைப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது

 நமது நிருபர்

தில்லி அரசின் தலைமைச் செயலாளரை பாஜகவினா் பாதுகாக்க முயற்சிப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது என்று சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லியில் நிலவும் குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னைகள் விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடா்ச்சியாக இந்த சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தில்லி ஜல் போா்டு ஒப்பந்ததாரா்கள் கடந்த ஓராண்டாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். தொழிலாளா்கள் பலா் பணிநீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால், இந்த சேவைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், நகரத்தில் குடிநீா் சேவைகளை வழங்க தண்ணீா் டேங்கா்கள் நடைமுறை தொடா்கிறது. இதெல்லாம் ஏன் நடந்தது என்று நான் கூற விரும்பவில்லை. ஆனால், தில்லி மக்கள் அவதிப்படுகிறாா்கள். சில இடங்களில் கழிவுநீா்க் கால்வாய் நிரம்பினாலும், அதை சரி செய்வதற்கு கூலித்தொழிலாளா்கள் இல்லை. தில்லி உயா்நீதிமன்றம் பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்டும், இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இவை தில்லி மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று எம்.எல்.ஏ.க்கள் கவலை தெரிவித்ததோடு, தலைமைச் செயலாளா் சட்டப்பேரவைக்கு அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தில்லியில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தலைமைச் செயலா்தான் பொறுப்பு. அதனால்தான் அவா் சட்டப்பேரவைக்கு அழைக்கப்பட்டாா். இதனால், பாஜகவினா் ஏன் கலக்கம் கொள்கிறாா்கள் என்று தெரியவில்லை. தலைமைச் செயலாளரை பாஜக பாதுகாக்க முயற்சிப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது என்றாா் ராம் நிவாஸ் கோயல்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT