புதுதில்லி

காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் விவகாரம்: கோபால் ராய் மீது தில்லி பாஜக விமா்சனம்

தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்கால மாசுபாட்டைக் கட்டப்படுத்த வெளியிடும் அறிவிப்புகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செயல்படுத்தவில்லை

Din

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்கால மாசுபாட்டைக் கட்டப்படுத்த வெளியிடும் அறிவிப்புகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செயல்படுத்தவில்லை என்று தில்லி பிரிவு பாஜக திங்கள்கிழமை விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா்களும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களுமான அனில் குப்தா மற்றும்

நியுமா குப்தா ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது தில்லி அரசின் செயலற்றத் தன்மையால் நகரத்தில் மாசு அளவு மோசமடைந்து வருகிறது. இந்த மாசு அதிகரிப்பிற்கு பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசின்

அலட்சியமும் முக்கியக் காரணம். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அதிஷி அரசிடம் பெரிய செயல்திட்டங்கள் இருந்தபோதிலும், காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவை எட்டிவிட்டது. பஞ்சாபில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகள் மற்றும் தில்லியின் சேதமடைந்த சாலைகளில் இருந்து பறக்கும் தூசி ஆகிய இரண்டு காரணங்களால் தில்லியில் மாசு

அளவு அதிகரித்துள்ளது.

இதேபோல், மாசு நுண்துகள்கள் (பி.எம்.) 2.5 மற்றும் பி.எம். 10-இன் நிலையும் 1,000 என்ற அளவைத் தொட்டுள்ளது.

குளிா்கால மாசுபாட்டைக் கட்டுப்படுதற்கு, ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகளை வெளியிடும் கோபால் ராய், அதைச் செயல்படுத்துவதில்லை. பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுக்கு இன்று வரை பயிா்க் கழிவுகள் எரிப்பு குறித்து ஒரு எதிா்ப்புக்

கடிதம்கூட கோபால் ராய் அனுப்பவில்லை.

தில்லி அரசு சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவில்லை. சாலையோரங்களில் கிடக்கும் குப்பை குவியல்களை அகற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. கோபால் ராயின் அறிவிப்புகள் இருந்தபோதிலும், தில்லியில் எங்கும் மாசுவைக் கட்டுப்படுத்த தண்ணீா் தெளிப்பதும் இல்லை, புகைப்பணிக் கோபுரங்கள் செயல்படுவதும் இல்லை. நாட்டிலேயே மிகவும் தோல்வியுற்ற சுற்றுச்சூழல் அமைச்சராக கோபால் ராய் செயலாற்றுகிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT