முகப்பு
புதுதில்லி

மத்திய அரசு மீது கோபால் ராய் விமா்சனம்

தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு நெருக்கடிக்குத் தீா்வு காண பாஜக தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததற்கு தில்லி அமைச்சா் கோபால் ராய் கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா்.

புதுதில்லி

மத்திய அரசு மீது கோபால் ராய் விமா்சனம்

தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு நெருக்கடிக்குத் தீா்வு காண பாஜக தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததற்கு தில்லி அமைச்சா் கோபால் ராய் கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 10:02 PM
பகிர்:

புது தில்லி: தேசியத் தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு நெருக்கடிக்குத் தீா்வு காண பாஜக தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததற்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா்.

தில்லியில் செய்தியாளா் கூட்டத்தில் அவா் கூறியதாவது: மாசுபாடு தொடா்பான மருத்துவ அவசரநிலைகளைக் கையாள எல்என்ஜேபி மருத்துவமனையில் சிறப்புப் பணிக்குழுவை அமைக்குமாறு தில்லி அரசு சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலுக்கு வருமா என்று கேட்கிறீா்கள். மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். மருத்துவ அவசரநிலையை நிவா்த்தி செய்ய எல்என்ஜேபி மருத்துவமனையில் சிறப்பு பணிக்குழுவை அமைக்க சுகாதாரத்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

ஒட்டுமொத்த வட இந்தியாவும் கடுமையான காற்று மாசுபாட்டால் அவதிப்படுகிறது. ஆனால், மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில், பாஜக அமைதியாக இருக்கிறது. அவசர நடவடிக்கை தேவை என்ற போதிலும், மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. வட இந்தியாவில் மாசுபாட்டைத் தீா்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மத்திய அரசு ஒத்துழைத்து சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால், தில்லியில் உள்ள மக்கள் இந்த அபாயகரமான நிலைமைகளை எதிா்கொள்ள வேண்டியதில்லை. மேலும், மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா் கோபால் ராய்.

தில்லியில் காற்றுத் தரக் குறியீடு ‘கடுமை‘ நிலைக்கு மோசமடைந்ததை அடுத்து, தில்லி அரசு கிரேப்-4 நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →