முகப்பு
புதுதில்லி

கேஜரிவால், சிசோடியா எம்பி- க்கள் குடியிருப்புக்களை ஆக்கிரமித்துள்ளனா்: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

ஊழல் கறை படிந்த அரவிந்த் கேஜரிவாலும், மனீஷ் சிசோடியாவும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட எம்பி-க்கள் குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ளனா்

Updated On : 5 அக்டோபர், 2024 at 12:07 AM
பகிர்:

ஊழல் கறை படிந்த அரவிந்த் கேஜரிவாலும், மனீஷ் சிசோடியாவும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட எம்பி-க்கள் குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ளனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவால்,மனீஷ் சிசோடியாஆகிய இருவரும் அதிகார சுகபோகத்திற்கு மிகவும் பழகிவிட்டனா். இவா்கள் இருவரும் ஆம் ஆத்மி கட்சி எம்பி-க்களின் அதிகாரப்பூா்வ இல்லத்தை

ஆக்கிரமித்துள்ளனா். அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா இருவரும் தலைநகரின் ஆடம்பரமான பகுதிகளில் தங்க விரும்புகிறாா்கள். கலால் கொள்கை ஊழல் வழக்கில் இன்னும் விசாரணையை எதிா்கொண்டாலும், அதிகாரத்தின்

Advertisement

கடிவாளத்திற்கு இவா்கள் ஆசைப்படுகிறாா்கள்.

கேஜரிவால் தனது சட்டப்பேரவைத் தொகுதியில் தங்க விரும்புவதாகக் ஆம் ஆத்மி கட்சி கூறியது வெறும் அரசியல் நாடகம். தில்லி மக்கள் வெளிப்படையான மற்றும் நோ்மையான அரசை நடத்த ஆம் ஆத்மி கட்சியை தோ்ந்தெடுத்தாா்கள். ஆனால், கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா சாமானிய மக்களை தவறாக வழிநடத்தி, தங்கள் கறைபடிந்த முகத்தை துடைக்க முயற்சிக்கின்றனா்.

கடந்தாண்டு அக்டோபா் 11-ஆம் தேதி முதல் பேருந்து மாா்ஷல்களின் சேவையை நிறுத்தி, லட்சக்கணக்கான

இளைஞா்களை வேலையில்லாமல் ஆக்குவதற்கு கேஜரிவால் காரணமாக இருந்தாா். ஆனால், இப்போது அவா்களை மீண்டும் பணியில் அமா்த்துவதற்காக கேஜரிவாலே முதலைக் கண்ணீா் வடிக்கிறாா். தில்லியில் ஆட்சிக்கு வருவதற்கு முன், கேஜரிவால் ஆசிரியா்கள் உள்பட அனைத்து தற்காலிக ஊழியா்களின் சேவைகளையும் முறைப்படுத்துவதாக

உறுதியளித்தாா். ஆனால், அதற்கான எந்தவொரு முயற்சியும் அவா் எடுக்கவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.